புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012



குழந்தைகளை இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற இளைஞன் யார்? - பரபரப்புத் தகவல்கள்
 உலகையே உலுக்கியிருக்கிறது அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் நடந்துள்ள பள்ளிக் குழந்தைகள் மீதான துப்பாக்கிச் சூடு. 
 28 பேரை பலி வாங்கியிருக்கும் இந்தப் பயங்கரச் செயலைச் செய்தவன் ஆடம் லான்சா என்ற இருபது வயது இளைஞன். 
 
அவனுக்கு மனநிலைப் பிரச்சனை இருந்தது என்கிறார் ஆடமின் சகோதரர் ரேயான் லான்சா. இவருக்கும் ஆடமுக்கும் நான்கு வயது வித்தியாசம். இவர் தனியாக நியுஜெர்சியில் வசிக்கிறார். ஆடமுக்கு ஆட்டிஸம் பிரச்சனைகள் இருந்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். இவர் தன் தம்பியிடம் பேசி இரண்டு வருடங்கள் ஆகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவரையும் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 
 
ஆடம் லான்சாவும் அவனது அம்மா நான்சியும் வசித்தது கனெக்டிக்கட்டில் உள்ள நியுடவுன் பகுதி மிகவும் அமைதியான, அழகான பகுதி. இவர்கள் வசித்தது வசதிமிக்கவர்கள் வாழும் பகுதியில். 
 
வெள்ளியன்று காலையில் வீட்டில் தனது அம்மாவை சுட்டுக் கொன்று விட்டு அவரது துப்பாக்கிகளையும் வீட்டிலிருந்த மற்ற துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு சாண்டி ஹூக் ஆரம்பப் பள்ளிக்கு அம்மாவின் காரில் சென்றிருக்கிறான். அது அம்மா வேலைப் பார்த்த பள்ளி என்பதால் அவன் உள்ளே செல்ல அனுமதி எளிதாக கிடைத்திருக்கிறது. 
 
உள்ளே நுழைந்தவன் பள்ளி முதல்வரையும் அங்கிருந்த மற்ற பெரிய ஆட்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு வகுப்பறையில் நுழைந்து ஒவ்வொரு பிள்ளையாய் சுட்டிருக்கிறான். அவன் சுட்டதில் அந்த வகுப்பறைகளில் இருந்த ஒரே ஒரு பிள்ளை மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறது என்கிறது காவல் துறை வட்டாரம். 
 
எதற்காக ஆடம் இப்படி செய்தான் என்பதற்கு யாரிடமும் பதிலில்லை.
 
‘ அவன் அதி புத்திசாலி. மேதை என்று கூட சொல்லலாம். நன்றாக படிப்பான். பள்ளியில் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறான். ஆனால் யாரிடமும் பேச மாட்டான். பழக மாட்டான். தனிமைதான் அவனுக்கு எப்போதும் பிடிக்கும்.’ என்கிறான் ஆடமுடன் பழகிய நண்பர் ஒருவர். 
 
ஆடமின் தந்தை விவாகரத்துக்குப் பிறகு ஸ்டாம்ஃபோர்டில் வசிக்கிறார். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் வரி இயக்குநராக பணிபுரிகிறார். 
 
‘அவனுடைய பெற்றோர் அவனை மிகவும் அன்புடன் வளர்த்தார்கள். மிகவும் நேசித்தார்கள். எனக்குத் தெரிந்து அவனுக்கு மன ரீதியாக உதவி வேண்டியிருந்தால் அவர்கள் தயங்காமல் செய்திருப்பார்கள்’ என்கிறார் ஆடமின் அத்தை மார்ஷா லான்சா. 
 
‘இந்த் ஜூன் மாதம் என் கணவர் ஆடமை சந்தித்திருக்கிறார். ஆனால் அவனிடம் எதுவும் வித்தியாசமாக அவருக்குப் படவில்லை. இயல்பாய்தான் இருந்திருக்கிறான்’ என்கிறார் அவர். 
 
இப்படி எல்லோரும் ஆடமைக் குறித்து சாதாரணப் பையன் தான் என்கிறார்கள். ஆனால் அவன் ஏன் இந்தப் படு பாதகச் செயலைச் செய்தான்? அவனும் தற்கொலைக் செய்துக் கொண்ட சூழலில் இதற்கு விடை கிடைக்குமா என்று தெரியவில்லை. 

ad

ad