புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012

இலங்கையில்மாத்தளை  நகரில் கொன்று புதைக்கப்பட்ட 60 பேரின் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. இங்குள்ள ஒரு மருத்துவ வளாகத்தில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றபோது, இந்த 60 பேரின் எலும்புகள் கிடைத்ததாக பி.பி.சி. தெரிவிக்கிறது.

1980-ம் ஆண்டு இப்பகுதியில் அரசுக்கு எதிராக எழுந்த சிங்கள இடது சாரி கொரில்லா கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அல்லது
1940-ம் ஆண்டு இப்பகுதியில் நடந்த நிலச்சரிவின் போது கொல்லப்பட்டவர்களா இருக்கலாம் என்று இன்னொரு தரப்பு செய்தியும் கூறப்படுகிறது.

2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக வடக்குப் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் மற்றொரு தரப்பு செய்தியும் தெரிவிக்கின்றது. ஏனெனில் இங்கு வெளிப்படையான விசாரணைக்கு அனுமதி இல்லை என்பதுதான் உண்மை.

இது ஒரு கல்லறை பகுதி அல்ல. அரசியல் அல்லாத காரணத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இங்கு ஒரு மனித உரிமை மீறல் குற்றம் நடந்துள்ளது. முழு விசாரணைக்கு பிறகே உண்மை தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

ad

ad