புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013


சி.சிறிதரன் பா.உ புலனாய்வு பிரிவினரால் மூன்று மணி நேர விசாரணையின் பின்னர் விடுவிப்பு
நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வு (CID) பிரிவின் முதலாம் யூனிட்டை சேர்ந்தவர்கள் காலை 12 மணியிலிருந்து 3.00 மணிவரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக சிறிதரன் எம்.பி தமிழ்வின்னுக்கு தெரிவித்தார்.
இதன்போது கடந்த ஜனவரிமாதம் 12ம் திகதி கிளிநொச்சியில் அமைந்திருக்கும் தனது அலுவலகத்தில் மீட்கப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் இராணுவத்திற்கு எதிரான இறுவட்டுக்கள் போன்றன தொடர்பாக துருவித்துருவி விசாரணைகளை மேற்கொண்டதாகவும், இதற்கிடையில் குறித்த சம்பவத்தின்போது கைது செய்யப்பட்ட கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேளமாலிகிதன் மற்றும் தனது பிரத்தியேக செயலாளர் பொன்காந்தன் அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணையை தொடர்வதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையைத் தொடர்ந்த புலனாய்வு பிரிவினர் அவரிடம் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியாக இருந்ததாகவும், இக்காலப்பகுதியில் தேசியத்தலைவரிடம் விருது பெற்றிருப்பதாகவும் அவரது வாக்குமூலங்களை பெறமுனைந்தபோது அதற்கு தான் முற்றுமுழுதாக மறுப்பு தெரிவித்தாக சிறிதரன் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் 1998ம் ஆண்டு வவுனியாவில் இயங்கிவந்த குற்றத்தடுப்பு பொலிசாரால் விடுதலைப்புலி சந்தேகநபர் எனும் பெயரில் தான் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விசாரணையின்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன மற்றும் இளைநிலை சட்டத்தரணி சாவகச்சேரி சஜந்தன் ஆகியோரும் சிறிதரன் எம்.பியுடன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
சி.சிறிதரன் பா.உ பயங்கர வாத புலனாய்வு பிரிவினரால் மூன்று மணி நேர விசாரணையின் பின்னர் விடுவிப்பு

கடந்தவாரம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (CID) யினரால் அழைக்கப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிழை தலைவரும் சிரேஸ்ர சட்டத்தரனியுமான K.V தவராஜா பாராளுமன்ற உறுப்பிணரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான M.A சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி செயலானர் நாயகமும், சர்வதேச பாராளுமன்ற பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன மற்றும் இள நிலை சட்டத்தரணி சாவகச்சேரி சயந்தன் ஆகியவர்களுடன் இன்றைய விசாரனைக்கு சென்றிருந்தார்.
பராளுமன்ற உறுப்பினர் 12.00 தொடக்கம் 3.00 மணி வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மிகவும் கௌரவத்துடன் தன்னை விசாரனை செய்ததுடன் தன்னுடன் வந்திருந்த பராரளுமன்ற உறுப்பினர்களையும் சட்டத்தரணிகளையும் தன்னை விசாரணை செய்த இடத்திற்கு அனுமதிக்க வில்லை என்பதுடன் தனது அரசியல் செயற்பாட்டை முடிக்குவதற்கான முன்னேடி நடவடிக்கையாக இருக்கலாம் என தான் அவதானிப்பதாக விசாரணையின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்தார்

ad

ad