தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,மீண்டும் ஏகமனதாகத் தெரிவு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளராக செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளராக வி.மணிவண்ணன் ஆகியோர் மீண்டும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்படடுள்ளனர்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 வது வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகி கட்சியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை தாங்கியிருந்தார். முன்னதாக ஆரம்ப நிகழ்வாக கட்சியின் கொடி தலைவர் கஜேந்திரகுhர் பொன்னம்பலம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.அடுத்த நிகழ்வாக உயர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து ஈகச் சுடரேற்றப்பட்டிருந்தது. ஈகச் சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உபதலைவருமாகிய திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஏற்றி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
கட்சியின் வருடாந்தச் செயற்பாட்டு அறிக்கை கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. அதனைத்தொடர்;ந்து கட்சியின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. கட்சியின் புதிய தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், பொதுச்செயலாளராக செல்வராசா கஜேந்திரன் அவர்களும், தேசிய அமைப்பளாராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக சபைத் தெரிவினைத் தொடா்ந்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தியிருந்தார்.