புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013


வன்னி மக்களது அவலக்கதைகளால் திக்குமுக்காடிப்போயினர் எதிரணி கூட்டமைப்பினர்

வன்னி மக்களது அவலக்கதைகளால் திக்குமுக்காடிப்போயினர் எதிரணி கூட்டமைப்பினர்.குறிப்பாக இக்குழுவினில் அடங்கியிருந்த எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களது கேள்விக்கணைகளால் அதிர்ந்து போய் இருந்தார்.எதிர் கட்சிகளது கூட்டமைப்பிற்கு ஆதரவு திரட்ட என புறப்பட்ட குழுவினர் கடு;ம் எதிர்வினைகளை இன்றே சந்தித்தனர்.

2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் நாங்கள் ஒப்படைத்த எங்கள் உறவினர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதையாவது வெளிப்படுத்தச்சொல்லுங்கள் என கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொது எதிரணியினர் முன்னிலையில் மக்கள் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர்.

சனிக்கிழமை இன்று காலை கிளிநொச்சியிலுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம்(அறிவகம்) சென்றிருந்த பொது எதிரணியினர் அங்கு வந்திருந்த சுமார் நூற்றுக்கணக்கான காணாமல் போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துதக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போதே மக்கள் மேற்படி உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முல்லைத்தீவு, ஓமந்தை பகுதிகளில் வைத்து இராணுவத்தினரிடம் எங்கள் பிள்ளைகளை, கணவன், மனைவியை, பிள்ளைகளை ஒப்படைத்தோம்.ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரையில் தெரியவில்லை, இராணுவத்தினர் தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறுகின்றனர். அரசாங்கம் அப்படி யாரையும் இராணுவம் பொறுப்பேற்க வில்லை எனக்கூறுகின்றது. அப்படியாயின் எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகளுடன் சிறுவர்கள், சிறுமியர்களையும் கூட்டிச் சென்றார்கள்.

அவர்களுக்கு என்ன நடந்தது? உறவுகளை தொலைத்துவிட்டு, மனநோயாளிகளாக, வறியவர்களாக, நோயாளிகளாக மாறியிருக்கின்றோம் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கூறுங்கள் என கண்ணீர் மல்க தங்கள் உறவுகளின் புகைப்படங்களுடனும், புகைப்படப்பிர திகளுடனும் மக்கள் கண்ணீர் மல்கினர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பு கடுமையான மன உளைச்சலை தமக்கு ஏற்படுத்தியிருப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பு மிகவும் பெறுமதிவாய்ந்த ஒன்று என்றும் பொது எதிரணியினர் இன்று மாலை நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளதுடன், அந்த மக்களின் கண்ணீருக்கும், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் செய்திருக்கும் அநீதிகளுக்கும் நிச்சயமாக பதில் சொல்லியாகும் நிலை உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ள பொது எதிரணியினர், விடயம் தொடர்பில் பாராளுமன்றிலும், சர்வதேச ஜனநாயக அமைப்புக்க ளிடமும் தெரியப்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர்.

ad

ad