புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சி:மன்னாரில் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்டோர் கைதின் பின்னணியென்ன? விரிவான தகவல்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) உள்ளிட்ட பதினைந்து
பேர் கைது செய்யப் பட்டது நீங்கள் அறிந்ததே. இதுகுறித்து “அதிரடி” இணையத்தின் வவுனியா மாவட்ட செய்தியாளர் கரிகாலன் தற்போது தெரிவிக்கையில்..

எட்டு ஆண்களும், ஏழு பெண்களுமாக பதினைந்து பேர் மன்னார் பெரியகடைப் பகுதியில் உள்ள “பொது நோக்கு” மண்டபத்தில் வைத்து இராணுவத்தாலும், பொலிசாரினாலும் சுற்றிவளைத்து கைது செய்யப் பட்டதாகவும்,

இவர்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி), மன்னார் ஆயுர்வேத வைத்தியர் மகேந்திரன், பழைய தமிழ் காங்கிரஸ் அமைப்பாளரும் மன்னார் பிரபல மீன் வர்த்தகருமான பெனடிக், மன்னார் ஊடகவியாளர் ஜோசெப் ஆகியோர் பிரபலமானவர்கள் எனவும், கலந்து கொண்ட பெண்கள் ஏழு பேரும் ஏதுமறியா அப்பாவிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பதினைந்து பேர் தொடர்பாகவும் கூட்டமைப்பின் மன்னார் பாராளுமன்ற உறுப்பினரான, ரெலோ முக்கியஸ்தர் எஸ்.வினோ நோகதாரலிங்கம் அவர்கள் மன்னார் பொலிஸ் அதிகாரி லக்சிறி விஜேயசிங்க உடன் நேரில் சென்று உரையாடி உள்ளதாகவும், அதன்போது இவர்கள் நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதாவது..

*”தமிழின படுகொலை- மே 18″ எனும் பதாகை வைத்து இருந்தமை..

*கனடாவில் உள்ள வெளிநாட்டுப் புலிகளின் அமைப்பான “உறங்கா விழிகள்” எனும் அமைப்பின் பற்றுச்சீட்டு வைத்திருந்தமை..

*விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் (A4 size லான கருப்பு,வெள்ளைப் போட்டோ பிரதிப் புகைப்படம்) வைத்திருந்தமை..

*சட்டத்துக்கு முரணான வகையில் கூட்டம் கூடியமை..

தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதில் ஊடகவியாளர் ஜோசெப் ஏனைய சில ஊடகவியலாளரின் சரீரப் பிணை உத்தரவாதத்தின் அடிப்படையிலும், அதேபோல் பெண்கள் ஏழு பேரும் சில உத்தரவாதத்தின் அடிப்படையில் தற்போது விடுவிக்க உள்ளதாகவும் ஏனையோர் மீது விசாரணை நடைபெற்று இன்று இரவோ அன்றில் நாளையோ விடுவிக்கப்படலாம் எனவும் தெரிய வருகின்றது.
-மன்னாரிலிருந்து “அதிரடி” இணையத்தின் வவுனியா செய்தியாளர் கரிகாலன்.

கூட்டமைப்பின் மன்னார் பாராளுமன்ற உறுப்பினரான, ரெலோ முக்கியஸ்தர் எஸ்.வினோ நோகதாரலிங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்ட போது..

“தான் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி லக்சிறி விஜெயசிங்கவுடன் சற்று முன்னர் நேரில் சென்று சந்தித்ததாகவும், அதன் போது…

“தமக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதாவது “புலிகளுக்கு ஆதரவாக அஞ்சலிக் கூட்டம் நடப்பதாகக்” கிடைத்த தகவலை அடுத்து தாம் அவ்விடத்தில் இருந்த இவர்களைக் கைது செய்ததாகவும், இவர்களிடமிருந்து பிரபாகரனின் புகைப்படம் (போட்டாப் பிரதி) உட்பட நான்கு குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாகவும்” தெரிவித்ததுடன் அந்த ஆதாரங்களை என்னிடம் காட்டியதுடன்,
“இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் பின் இவர்கள் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள்” என உறு

ad

ad