புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


எந்தவொரு 18 வயதுக்கும் மேற்பட்ட ஆணும் பெண்ணும் தாமாக விரும்பி விடுதிகளில் தங்கியிருந்தால் அவர்களைக் கைது செய்யமுடியாது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை மாத்திரமே எம்மால் கைது செய்யமுடியும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவிதார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதியொன்றினுள் ஒரு குற்றம் நடைபெறுகின்றது என்றால் அக்குற்றம் தொடர்பாகப் புலனாய்வுகள் மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து கட்டளையைப் பெற்ற பின்பே நாம் விடுதியினுள் சென்று விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இது சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
நாம் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யமுடியாது. அப்படி சமூக நலன் கருதி நீதிமன்றத்தின் அனுமதியின்றி செயற்பட்டால் எமக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். கடந்த திங்கட்கிழமை யாழ். நகரிலுள்ள விடுதியை யாழ்ப்பாண பிரதேச செயலர் சோதித்து அங்கு தங்கியிருந்த இளைஞனையும் யுவதியையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார். நாங்கள் செய்யவேண்டிய பணியை பிரதேச செயலர் செய்துள்ளமை சட்டத்திற்கு முரண்பாடான செயற்பாடாகும். எனவே அவர்கள் மீது இவ்விடயம் தொடர்பாக வழக்குத் தொடர உள்ளோம் என்றார்.

ad

ad