புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


யுத்த வெற்றிவிழாவில் 30 போர்விமானங்கள் 50 யுத்தக்கப்பல்கள், 100 தாக்குதல் வாகனங்கள், காலை 9 மணியளவில் ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு உரை


விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு விழா இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வெற்றிவிழாவில்
இராஜதந்திரிகள், மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
காலை 9 மணியளவில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வெற்றிவிழாவில் உரையாற்றவுள்ளார். விழாவில் முப்படையினரது அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் விமான சாகசங்களும் இடம் பெறவுள்ளன. 12 ஆயிரத்து 700 படைவீரர்களும் 945 அதிகாரிகளும் விசேட அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த வெற்றிவிழா குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய கருத்துத் தெரிவிக்கையில்:- இராணுவத்தின் இந்த வெற்றிவிழாவை பார்வையிடுவதற்கு அனைத்து இன மக்களும் வரவேண்டும். அதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வெற்றிவிழாவை முன்னிட்டு கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டிருக்கும். இறுதி யுத்தத்தில் அங்கவீனமான 100 வீரர்களும் விசேட அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்.
இன்றைய விழாவில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ , பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் எம்.கே. இளங்கக்கோன், உட்பட முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொள்வார்கள்.
அணிவகுப்பில் இராணுவத்தினரின் 100 தாக்குதல் வாகனங்களும், 50 போர் கப்பல்களும், 30 தாக்குதல் விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

ad

ad