புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013

இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடத்தப்பட்டு 4-ம் ஆண்டையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து உலகதமிழர் பேரவைத்தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கூறியதாவது:-

இனவாத இலங்கை அரசு தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை கடந்த 2009-ம் ஆண்டு செய்து முடித்தது. தமிழர் கடலின் கரையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இலங்கையில் அனைவரும் வேடிக்கை பார்க்க தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

தமிழீழ இன அழிப்பின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

'எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம், தமிழீழம் மலரும் வரை ஓயமாட்டோம்' என்ற முழக்கத்துடன் இந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதில் கட்சி வேறுபாடின்றி, அனைத்து கட்சியினரும், பொதுமக்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும், தமிழர்கள் என்ற உணர்வோடு கலந்து கொள்ள உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதே நாளில் ஒவ்வொரு நாடுகளிலும் கூடி இந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வீரவணக்கத்துடன், இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை உலகம் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ad

ad