புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


சுதந்திரத்தமிழீழம் கானல் நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை
சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வை இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் புலிகளின் குரல் அந்தணனின் முகவுரையுடன் புலவர் புலமைப்பித்தன், புலவர் மறத்தமிழ்வேந்தன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் இராஜேஷ் ஆகியோரின் வரிகளுடன் உருவான "விடுதலைக்கு மரணமில்லை" ஒலிப்பேழை குறுந்தட்டு வெளியிடப்பட்டது. மதிமுக தோழர் ஒருவரின் ஆண் குழந்தைக்கு "பிரபாகரன்" என்று பெயரினை வைகோ அவர்கள் இந்நிகழ்வில் சூட்டினார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை எழும்பூர் பகுதி மதிமுகவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.




ad

ad