புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013


ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு இருப்பது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 
இந்த நிலையில் சென்னையில் தனியாக ஒரு கிரிக்கெட் சூதாட்டம் நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ளதை தமிழ்நாடு போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
ஐ.பி.எல். சீசனிலும் சூதாட்டம் நடைபெறுகிறதா என்று கடந்த ஒருமாதமாக சென்னையில் போலீசார் கண்காணித்து வந்தனர்.

மும்பையில் டெல்லி போலீசார் சூதாட்ட கும்பலை கைது செய்ததையடுத்து சென்னையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். இவர்கள் சென்னையில் தனியாக ரகசிய இடத்தில் அலுவலகம் அமைத்து செயல்பட்டுள்ளனர். 
இவர்கள் சட்ட விரோதமாக புக்கிஸ் அசோசியேசன் என்ற பெயரில் நடத்தி வந்தனர். இதனை ஹரீஷ் பஜாஜ் என்பவர் தலைமை ஏற்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு கீழ் லக்கியா அலியாஸ் நர்பத், சுனில் பஜன்லால், தீபக் பஜாஜ், பப்பு கவுதம், விருத்தாச்சலம் என்கிற வேதாச்சலம் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சூதாட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களை தாமாகவே தொடர்பு கொள்வார்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு எஸ்.எம்.எஸ். தகவலும் அனுப்புவார்கள். 
அதில் இன்றைய போட்டியில் எந்த அணி ஜெயிக்கும்? என கேள்வி  இருக்கும். போனிலும் இதே கேள்வி கேட்பார்கள். ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்ட அணியின் பெயரைச்சொல்லி அந்த அணி வென்றால் ரூ.10 ஆயிரம் என தங்கள் தகுதிக்கு ஏற்ப பணம் கட்டுவார்கள். இதில் சேர்ந்து விளையாடுவோரின் பெயர், முழு முகவரி சூதாட்டக் காரர்களிடம் இருக்கும்.
இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் இந்த சூதாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதை முன்னின்று நடத்தியவர்கள் மட்டும் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய லேப்-டாப், கம்ப்யூட்டர்கள், டெலிபோன்கள், 24-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
சாதாரண ஊழியர் முதல் பெரும் கோடீசுவரர் வரை பணம் கட்டி விளையாடி இருக்கிறார்கள். ரூ.5 ஆயிரம் முதல் லட்சம், பல லட்சம் என பணம் கட்டி இருக்கிறார்கள். பலகோடி பணம் இதில் விளையாடி இருக்கிறது. சூதாட்டக்காரர்கள் நிறைய பேருக்கு பணம் தராமல் மோசடியில் ஈடு பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதாரணத்துக்கு ஒருவர் ரூ.10 ஆயிரம் கட்டி அவர் சொன்ன அணி வெற்றி பெற்றால் அவருக்கு முழுப் பணம் கொடுக்க மாட்டார்கள். பாதிப் பணம்தான் கிடைக்கும். மீதிப்பணம் தராமல் ஏமாற்றி விடுவார்கள். 
அதே சமயம் சம்பந்தப்பட்டவர் தோற்றால் அவரிடம் முழுப்பணத்தையும் ஆள் அனுப்பி கறந்து விடுவார்கள். இப்படியும் மோசடி நடந்து இருக்கிறது. இவர்கள் பணப் பரிமாற்றம் செய்ய சில தனியார் கூரியர்களையும் பயன்படுத்தி உள்ளனர். சென்னை சூதாட்டக்காரர்களுக்கு டெல்லி, மும்பை சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.
இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி போலீஸ் எஸ்.பி. ராஜேஸ்வரி மற்றும் நாகஜோதி, பெருமாள் ஆகியோர், 6 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூபாய் 14 இலட்சம், கம்ப்யூட்டர்கள், டெ-போன்கள், செல்போன்கள் மற்றும் இதர பொருட்களை செய்தியாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். 
மேலும் அவர்கள் கூறியதாவது, ஐபிஎல் தொடர்பாக யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாக சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். தற்போது 6 பேரை கைது செய்துள்ளோம். இதைத்தொடர்ந்து இந்தியா முழுக்க இவர்களிடம் தொடர்புள்ள நபர்களை கூடிய விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

ad

ad