புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2013

இருகட்சிகளின் சுயநலத்தை தவிர இந்த நிகழ்வுக்குவேறு என்ன காரணம் இருக்கமுடியும் : சரத்குமார்
ராஜ்யசபைத் தேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்,
 ’’சுமார் 9ஆண்டுகாலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் அங்கம் வகித்து மத்தியில் பதவி சுகங்களை அனுபவித்து உலகத்தையே உலுக்கிய ஸ்பெக் ட்ரம் ஊழலுக்கு மைய காரணமாக அமைந்து, சுயநல அரசியலை மட்டுமே சொந்தம் கொண்டாடி வந்த திமுக தலைவருக்கு இலங்கைத் தமிழர் மீது திடீரென ஞானோதயம் வந்து கரிசனம் காட்டுவது போல் கண்ணீர்விட்டு,ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட்டு வெளியேறியது ஒரு தற்காலிக நாடகம் என்று அப்போது எழுந்த வேடிக்கை விமர்சனங்கள் தற்போது நிரூபணமாகி இருக்கின்றன.

ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் குறித்த திருத்தங்கள் இடம்பெறச் செய்யவில்லை என்று மத்திய அரசைக் குறை கூறியும், இலங்கைத்தமிழர் நலனுக்காகவும், அவர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்பதற்காகவும், கனத்த மனதோடு வெளியேறுவதாக கூறிய திமுக தலைவருக்கு திடீரென இளகிய மனம் ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது.
காவிரி நீர்ப்பிரச்சினையிலும்,தன்னால் தாரைவார்க்கப்ட்ட கட்சத்தீவை தற்போது மீட்க வேண்டும் என்றும் சொல்லும்,கச்சத்தீவுபிரச்சினையிலும் லட்சகணக்கில் ஈழத் தமிழினம் கொன்று குவிக்கப் பட்டபோ து,கண்களை காதுகளை வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருந்துவிட்டு திடீரென்று டெசோ அமைப்பிற்கு தூசிதட்டி முகாரி ராகம் பாடியபோது உலகத்தமிழினமே திமுகவின் இரட்டை வேடத்தைக் கண்டித்தது.
கொள்கையளவில் முரண்பாடுகளாலோ,குறைந்த பட்ச செயல்திட்டங்களில் கூட்டணிக் கட்சிகள் செய்துகொண்ட ஒப்பந்தங்களில் மீறல் காரணமாகவோ கூட்டணிக்கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டு வெளியேறும் நிலை உருவாகும்.ஆனால் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்கள் அடிபட்டுவிடுமோ அல்லது செய்து தவறுக்கு தண்டிக்கப்பட நேரிடுமோ என்ற அச்சத்தின் விளைவால் இவர்கள் கேட்டது கிடைக்காது என்பது தெரிந்ததும்,கூட்டணியை விட்டு வெளியேறுவது திமுகவிற்கு கைவந்த கலை என்பது உலகத்திற்கே வெளிச்சம்.உலகமே தூற்றும் அளவிற்கு ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் காங்கிரஸ் கட்சிக்கும் இத்தகைய அரசியல் அநாகரீகம் அத்துபடியான விஷயம்தான்.
கொள்கைகளையும்,கோட்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டு மீண்டும் காங்கிரஸூம், திமுகவும் கைகோர் த்து கொண்டிருப்பது அரசியல் உலகத்திற்கும் அறிவுசால் தமிழினத்திற்கும் அதிர்ச்சியை அளிக்கும் செயலாகும்.
ராஜ்யசபா உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப் பட வேண்டும், அதன்மூலம் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற இருகட்சிகளின் சுயநலத்தை தவிர இந்த நிகழ்வுக்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும்.

எண்ணிக்கை அடிப்படையில் ஒருவேளை கனிமொழி வெற்றிபெற்றாலும், நாடாளுமன்ற பொதுத் தேர்த லில் தமிழினவிரோத காங்கிரஸ் கூட்டணியை புறமுதுகிட்டு ஓடச்செய்து தமிழக முதல்வர் தலைமையில் அமையும் கூட்டணிக்கு புதுவையுடன் சேர்ந்து வாக்காளப்பெருமக்கள் நாற்பதையும் அளித்து ஏற்றமடையச் செய்வார்கள் என்பது உறுதி’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad