புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2013

3 ஆண்டாக தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியை மீட்பு

வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் ஒரு வீட்டில் ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக அடைத்து வைத்திருப்பதாகவும், அங்கிருந்து அழுகை
சத்தம் கேட்பதாகவும் பொதுமக்களிடம் இருந்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.

அதை தொடர்ந்து போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர் போது அந்த வீட்டில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனநிலை பாதிப்புக்கு உள்ளான நிலையில் எழுந்து நடக்கக்கூட முடியாமல் அழுது கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். 
மேலும் அந்த பெண்ணின் சகோதரி மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- வீட்டில் அடைத்து வைத்திருந்த பெண்ணின் பெயர் கீதா. தன்னுடைய தாய், தந்தையை இழந்தவர். 
பி.லிட் படித்து முடித்து விட்டு ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார். தாய், தந்தை இறப்பு காரணமாக அவர் மனநோய்க்கு ஆளாகி இருக்கிறார். அவரின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரும் வேலைக்கு சென்று வருவதால் அவரை கடந்த 3 ஆண்டுகளாக சாப்பாடு கொடுத்து தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். 
இதனால் அவருக்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து எங்களுக்கு சமூக நல அமைப்பிடம் இருந்தும் புகார் வந்ததால் அந்த பெண்ணை மீட்டுள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் செல்ல மறுத்தார். 
மேலும் அந்த பெண்ணின் உடல் நிலை மோசமாக உள்ளதால் அவரை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். கொணவட்டம் அரசு காப்பகத்தில் அந்த பெண்ணை சேர்த்தனர். பாதிக்கப்பட்டவரை தனி அறையில் அடைக்காதீர்கள் என்று அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருக்கு போலீசார் அறிவுரை கூறினர்.

ad

ad