முதல் வாக்கு ஜெயலலிதா : கடைசி வாக்கு எ.வ.வேலு
தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. முற்பகல் 11.25க்கு முதல்வர் ஜெயலலிதா
முதல் வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது.2 மணி 18 நிமிடங்கள் நடந்த இந்த வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 231 பேர் வாக்களித்தனர். பாமக உறுப்பினர்கள் 3 பேர் வாக்குப் பதிவில் கலந்து கொள்ளவில்லை.
முதல்வர் ஜெயலலிதா முதல் வாக்கைப் பதிவு செய்தார். கடைசியாக 231 வது வாக்கினை திமுகவின் எ.வ.வேலு பதிவு செய்தார்.