புதிய பிரபாகரனாக மன்னார் மாவட்ட ஆயர்: ஞானசார தேரர்
புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு செயற்பட்டுவருகின்றார் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
தமிழர் என்பதால் மன்னார் ஆயர் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகின்றார். எனவே இவருக்கு எதிராக குரல் கொடுக்க கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள சிங்கள ஆயர்கள் அனைவரும் முன்வரவேண்டும். தேசப்பற்றுமிக்க கத்தோலிக்கத் திருச்சபையின் சிங்கள ஆயர்கள் அனைவரும் நாடு எதிர்கொண்டுள்ள இந்த தீர்க்கமான கட்டத்தில் எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
ஒற்றையாட்சியை பலப்படுத்துவோம் மாகாண சபை முறைமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.