புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

வாய்ப்புகள் சரிவர அமையாததால் பெட்டியை கட்டி பலசரக்கு கடைக்கே திரும்பி விடலாம் என்ற எண்ணத்துடன் போய்க்கொண்டிருக்கும் பொழுது,மயக்கமா கலக்கமா என்ற பாடல்வரிகளைக் கேட்டு புத்துணர்ச்சியுடன் தன் மனதை மாற்றிக்கொண்டு முயன்று.. இன்று வரை பல தலைமுறை கடந்து வென்று வரும் வாலியின் பங்களிப்பு மிக முக்கியமானது..

தெய்வத்தாய் படத்தின் போது எம்ஜியாருக்கும் கண்ணதாசனுக்கும் ஏற்பட்ட சிறுகருத்து வேறுபாட்டால் வேறு யாராவது ஒரு கவிஞரை எழுதச் செய்ய வேண்டும் என்று ஆரெம் வீரப்பனிடம் எம்ஜியார் கூறிவிட்டதால்.. வாலியை அவருக்கு அறிமுகப்படுத்தினார்களாம்.. எதிர்பார்ப்பு ஏதும் இல்லாத காரணத்தால் அதிக கவனம் செலுத்தாமல் வேறு வேலையை பார்த்துக்கொண்டே வரிகளை கேட்டுக்கொண்டிருந்தாராம் எம்ஜியார்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.." என்ற வரிகளை வாலி சொன்னதும் புருவம் உயர்த்திய எம்ஜியார்(எம்ஜியாரின் வாழ்க்கையில் 3 எழுத்துக்கள் பெரும்பங்கு வகித்திருப்பது தெரிந்த விஷயம்)அதன் பிறகு வாலியின் வார்த்தைகளை கொள்கைப்பாடல்களாக பயன்படுத்தி ஆட்சியில் அமர்ந்தது வரை வாலியின் வரிகள் வலிமை மிக்கதாக பேசப்பட்டது..

தனக்கு பிடித்தமானதை
பிடித்துத் தருவான் என்று
தனக்கு பிடித்த மான் அதை
கேட்டாள்

என்று ராமாயணத்தை ஒருவரியில் எழுதுவதாகட்டும்,

இவர்கள் கண்மூடிப்போனதல் 
மண்மூடிப்போக வில்லை..
மண்மூடிப்போனதால் 
கண்மூடிப் போனவர்கள்..
(குஜராத் பூகம்பம் குறித்த கவிதையில்)

என்று வார்த்தை விளையாடும் இவர் இன்று வரை யூத் குத்து குத்துவதிலும் வல்லவர் என்பதால் வாலிபக் கவிஞர் வாலி என்று அழைக்கப்படுகிறார்.

ad

ad