புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013


நிலவும் தாரையும் நீயம்மா (அழகர் மலை கள்வன்)
    (கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல். ஒரு விழாவில் வாலி இப்படி குறிப்பிட்டார். "என்னுடைய முதல் பாடலை பாடியது பி.சுசீலா அவர்கள். தவிர, எனக்கு வாழ்வளித்த  எம்.ஜி.ஆர் படத்துக்கு  நான் எழுதிய பாடலை பாடியவர் பி.சுசீலா அவர்கள், அவர்கள் பாடிய ராசி இன்று வரை நான் திரை உலகில் இருக்கிறேன்"......  1988-இல் திரை உலகில் தன் முப்பதாவது வருடத்தை நிறைவு செய்தார் வாலி. அன்று அவர் இளையராஜாவிடம்,  "இன்று என் பாடலை பி.சுசீலா அவர்கள் பாட வேண்டும்" என விரும்பி கேட்டுக்கொண்டார். இளையராஜாவும் பி.சுசீலாவை அழைத்து "தென்றல் சுடும்" படத்துக்காக "தூரி தூரி தும்மக்க தூரி" என்ற பாடலை பாட வைத்தார். 
இளையராஜாவுக்காக வாலி எழுதிய முதல் பாடலை பாடியவரும் பி.சுசீலா தான். (கண்ணன் ஒரு கைக்குழந்தை))

ad

ad