அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேற படகில் வருபவர்களுக்கு அனுமதியில்லை: அவுஸ்.பிரதமர் - இலங்கை அரசு வரவேற்பு
அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் சென்று அரசியல் தஞ்சம் கோருவார் நீண்டகாலம் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வருபவர்கள் பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் உண்மையில் அகதி அந்தஸ்தை கோருவேரே அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது, ஏனையோர் திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்க்கப்படும் நிலையில், பிரதமரின் இந்த அகதிகள் தொடர்பான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இனிமேல் எவர் படகுகளில் வந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினாலும் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. தொடர்ந்தும் வருபவர்கள், பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் இது தொடர்பாக அந்த நாட்டின் உடன்பாடு ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ளது.
ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு, மக்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
அவுஸ்திரேலியாவில் போதுமான மக்கள் இருக்கின்றனர். அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதாக கூறி, ஆட்கடத்தில் ஈடுபடுபபவர்கள், மக்களை ஆழ் கடலில் மூழ்கடித்து வருகிறனர்.
அவுஸ்திரேலியாவுக்கு உறுதியான எல்லை பாதுகாப்பு படை உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் அறிவிப்பை இலங்கை வரவேற்றுள்ளது
படகுகள் மூலம் நாட்டுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகளை இனிமேல் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்களை பப்புவா நியுகினிக்கு அனுப்பப்போவதாக அவுஸ்திரேலியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பை, இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கும் பப்புவா நியுகினிக்கும் இடையில் இது தொடர்பாக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்பின்னர் தகவல் வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், சட்டரீதியற்ற அகதிகள் நேரடியாகவே பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அகதிகளாக இனங்காணப்படுவோர் அந்த நாட்டிலேயே குடியமர்த்தப்படுவர் என்றும் ரட் குறிப்பிட்டுள்ளார்.