புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013

பெண்கள் யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்குப் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. 
சுவீடனில் 11 ஆவது யூரோ கிண்ண கால்பந்து (பெண்கள்) தொடர் நடக்கிறது. இதில் ஜேர்மனி , இத்தாலி உள்ளிட்ட 12 அணிகள் மூன்று பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. சி பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின் , பிரான்ஸ் அணிகள் மோதின.  பிரான்ஸ் அணிக்கு போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் ரினார்ட் ஒரு கோலடித்தார். இதற்கு ஸ்பயின் அணியால்  பதிலடிக் கொடுக்க முடியவில்லை. முடிவில் பிரான்ஸ் அணி 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு லீக் போட்டியிலும் வென்ற பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் முதல் அணியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.  சி பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்து , ரஷ்ய அணிகள் மோதின. முதல் பாதியில் ரஷ்யாவின் கோரோவ்கினா (38) ஒரு கோலடித்தார். இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் டியூகான் ஸ்ரொப் பேஜ் நேரத்தில் (90+2) ஒரு கோலடிக்க போட்டி 11 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 

ad

ad