புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013




               ""ஹலோ தலைவரே...… சொத் துக் குவிப்பு வழக்கில் ஏற்படுற திருப்பங்களால் ஜெ. உக்கிரம்னு நம்ம நக்கீரனில் தெளிவா எழுதியிருந்தாங்க. அந்த உக்கிரத்தோட விளைவுதான் அந்த அரெஸ்ட்டாம்
.''நக்கீரன்

""எந்த அரெஸ்ட்டு?''


""டீடெய்லா சொல்றேன்… தி.மு.க.வில் கலைஞர் குடும்பத்து மேலேயோ கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மேலேயோ கேஸ் போட்டாலும் கடைசியில், போதுமான ஆதாரமில்லாம,  அவங் களுக்கு அதில் தொடர்பில்லைன்னு வெளியே வந்துடுறாங்க. அது மாதிரி உங்களுக்கு சரியான ஒரு டீம் இல்லைன்னு சட்டத்துறை வட்டாரத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருத்தர் ஜெ.கிட்டே சொல்ல, ஆமா.. உண்மைதான்னு ஜெ.வும் சொன் னாராம். அதற்கப்புறம், போலீஸ் தரப்புக்கு வந்த இன்ஸ்ட்ரக்ஷனில் கலைஞர் குடும்பத்தினர் மேலே ஏதாவது வம்புதும்பு இருக்கான்னு பாருங்கன்னு சொல்லப்பட்டிருக்குது.'' 

""ஓ... சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீடியாக்களிடம் சமீபத்தில் பரபரப்பை கிளப்பிய கைது விஷயத்தை சொல்றியா?''

""அதான்.. அதேதாங்க தலைவரே.. கலைஞரோட மகள் செல்வி. செல்வியோட மருமகன் ஜோதி மணி. ஜோதிமணி யோட அக்கா உமா மகேஸ்வரி. இவரு செட்டியார் சமுதா யத்தைச் சேர்ந்தவரு. ஆர்ச்சிட் பவுன்டேஷன்ங்கிற நிறுவனத்தை நடத்துறாரு. 2006-ல் நுங்கம் பாக்கத்தில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த அத்தப் பள்ளி கந்தசாமி செட்டி அசோசியேஷனுக்கு சொந்தமான 14 கிரவுண்டு நிலத்தை வாங்குறாரு. அது பற்றித்தான் இப்ப வழக்கு. கலைஞரோட சொந்தக்காரர் ரொம்ப அடியாளுங்களை வச்சி மிரட்டி ரொம்ப கம்மி விலைக்கு வாங்கிட் டாங்கன்னு அசோசியேஷன் பொரு ளாளர் கொடுத்த புகாரில் உமா மகேஸ்வரியை போலீஸ் கைது பண்ணி ஜெயிலில் தள்ளிடிச்சி. உமாமகேஸ்வரி யோட ஆர்ச்சிட் பவுன்டேஷனில் கலைஞர் மகள் செல்விக்கோ செல்வி யோட மருமகன் ஜோதிமணிக்கோ சட்டப்பூர்வமா எந்தத் தொடர்பும் இல்லை. ஜோதிமணிக்கும் அக்கா உமாமகேஸ்வரிக்குமே சரியான உறவு இல்லை. செல்விக்கு உமாமகேஸ்வரியை சுத்தமாகவே பிடிக்காதாம். பலமுறை கண்டிச்சுருக்காராம். இருந்தாலும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க ஏதாவது வழி இருக்கான்னு ஆராயும் படி போலீசுக்கு உத்தரவு வந்திருக் கிறதால, சீரியஸா ஆராய்ஞ்சிக்கிட்டிருக்காங்க.''

""சி.பி.எம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் சென்னையில் ஜெ.வை சந்தித்து பூங்கொத்து கொடுத்திருக்காரே.. கூட்டணி பற்றி ஏதாவது முடிவாகியிருக்குதா?''


""காங்கிரசும் பா.ஜ.க.வும் இல்லாத மாற்று அரசியலுக்கான பொதுமேடை என்ற அமைப்பை உருவாக்கி இந்தியா முழுவதும் உள்ள கட்சிகளை இடதுசாரிகள் திரட்டிக்கிட்டிருக்காங்க. அதற்கான ஆதரவு கேட்டுத்தான் போன வெள்ளிக்கிழமை யன்னைக்கு ஜெ.வை சந்தித்தார் காரத். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை இடதுசாரிகள் வலிமையா எதிர்க்கலைன்னு காரத்கிட்டே காரசாரமா விமர்சனம் செய்திருக்கிறார் ஜெ. அதற்கு காரத், டெல்லியில் நடக்கும் இந்த பொதுமேடை அமைப்பின் கூட்டத்தில் கலந்துக்கிட்டு உங்க கருத்தை சொல்லுங்கன்னு சொல்லியிருக்காரு. ஜெ. சிரித்த படியே அமைதியா இருந்துட்டாராம். 1977க்குப் பிறகு இந்திய மக்களிடம் அதிகளவில் கெட்ட பெயர் எடுத்த காங்கிரஸ் அரசு, இந்த மன்மோகன்சிங் அரசுதான்னு ஜெ.வும் காரத்தும் நினைக்கிறாங்க. அதை மையப்படுத்தி இடதுசாரிகள் உருவாக்கும் அமைப்பிற்கு ஜெ.வின் ஆதரவைப் பெறுவதுங் கிறதுதான் காரத்தின் ப்ளான். அதோடு, 2014 ராஜ்யசபா தேர்தலில் சி.பிஎம்.முக்கு ஒரு சீட் ஒதுக்கணும்ங்கிறதையும் ஜெ.கிட்டே பிரகாஷ்காரத் வலியுறுத்தியிருக்காராம்.''

""கார்டனில் சசிகலாவின் பவர் கூடியிருந்தாலும், ஜெ.வின் கோபத்திற்குள்ளாகியிருக்கிற தன்னோட சொந்தபந்தங்கள்கிட்டே சசிகலா பேசுவதில்லைன்னு போனமுறை சொல்லியிருந்தோம்.. நிலைமைகள் இப்ப எப்படி இருக்குது?''


""ஜெ. யார்யார் மீது கோபமா இருக்கிறாரோ அவங்க பக்கம் இப்பவும் சசிகலா திரும்பிப் பார்ப்பதில்லை. ஜெ.வின் கோபமும் குறைஞ்சபாடில்லை. தேனி மாவட்டம் கம்பத்தில் ஒரு இலக் கிய நிகழ்ச்சிக்காக ஆகஸ்ட் 15-ந் தேதி யன்னைக்கு எம்.நட ராஜன் வந்தாரு. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவங்க, நடராஜ னை குமார் ஓட்டலில் சாப்பிட வச்சாங்க. அந்த ஓட்டல் ஓனர் ராஜேந்திரன் அ.தி. மு.கவின் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர். இந்த விஷயம் உடனே மேலிடம் வரைக்கும் போயிடிச்சி. நடராஜனை குமார் ஓட்டல் ராஜேந்திரன் தேடிப்போய் சந்தித்ததா தகவல் போக உடனடியா அவரை அந்தப் பதவியிலிருந்து தூக்கிடிச்சி மேலிடம். கட்டம் கட்டப்பட்ட ராஜேந்திரன் முன்னாள் மா.செ. தங்க தமிழ்ச்செல்வனோட ஆதரவாளர். அதனால ஓ.பி.எஸ் ஆதரவாளரான மா.செ சிவகுமார் தரப்புதான் இந்த வேலையை செஞ்சிடிச்சின்னு ஆளுங்கட்சிக்குள்ளே குமுறல்.''

""திருமாவளவனோட 50-வது பிறந்தநாள் நிறைவு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் உற்சாகமா கொண்டாடப்பட்டிருக்குதே.. வாசலில் வள்ளுவர் கோட்டம் செட்டிங், உள்ளே குமரி திருவள்ளுவர் சிலை செட்டிங்னு கலைஞரைக் கவரும் விதத்தில் அரங்கம் அமைத்து அசத்திட் டாங்களாமே?''



""ஆமாங்க தலைவரே.. கலைஞருக்கு இதில் சந்தோஷம்தான். ஆனா விடுதலை சிறுத்தை களோட விளம்பரங்களில் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் இவங்க படமெல்லாம் போடுவது போல அண்ணா படத்தையும் போட வேணாமான்னு விழா மேடையில் கேட்ட கலைஞர், எந்த விளம்பரத்திலும் அண்ணா படத்தை போடாமல் என்னை விழாவுக்குக் கூப்பிட்டுள்ளார் தம்பி திருமா. இதுபோல பெரியார் படத்தைப் போடாமல் வீரமணியைக் கூப்பிட முடியுமான்னு கேட்க, திருமா உடனே தன்னோட இரண்டு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டு வருத்தத்தைத் தெரிவிச்சிக்கிட்டாரு.''

""அண்ணா படத்தை சிறுத்தைகள் தவிர்ப் பதற்கு ஏதாவது காரணம் இருக்குதா?''


""சிறுத்தைகளிடம் பேசினேங்க தலைவரே.. ஒவ்வொரு கட்சியும் அதன் கோட்பாடுகளின் அடிப்படை யில் மறைந்த தலைவர்களின் படங்களைப் போடுறது வழக் கம். அதுபோலத்தான் நாங் களும் போடுறோம். பெரியார் படத்தைப் போடுறோம்னாலே அண்ணாவையும் ஏற்றுக் கொண்டோம்னுதானே அர்த் தம். இருவரையும் பிரித்துப் பார்ப்பதில்லைன்னு ஏற்கனவே கலைஞருடனான சந்திப்பில் இதுபற்றிய பேச்சு வந்தப்ப திருமா சொல்லியிருக்காரு. இருந்தும், அண்ணா படம் மட்டும் இல்லையேங்கிற ஆதங் கத்திலும் உரிமையிலும் மேடை யிலேயே கலைஞர் இதை சொல்லிட்டாருன்னு சொல்றாங்க.''

""மூப்பனார் நினைவுநாள் நிகழ்ச்சியில் வாசன், விஜயகாந்த், திருமா எல்லோரும் அஞ்சலி செலுத்தியிருக் காங்களே!''


""விஜயகாந்த்துக்கும் திருமாவுக்கும் மூப்பனார் மேலே பற்று உண்டு. அதனால வருடா வருடம் வரு வாங்க. ஆனா காங்கிரசில் ப.சிதம்பரம், ஜெயந்தி நட ராஜன், சுதர்சன நாச்சியப்பன், இளங்கோவன் உள்ளிட்ட பெருந்தலைகள் மூப்பனார் நினை விடம் பக்கம் எட்டிப்பார்க்கலை. வாசன் ஆதரவாளர்களான பழைய த.மா.காகாரங்கதான் திரண்டிருந் தாங்க. அஞ்சலி முடிந்து வாசன் தன்னோட வீட்டுக்குப்போனப்ப அங்கேயும் திரண்டிருந்த அவருடைய ஆதரவாளர்கள், மறுபடியும் மத்தி யில் காங்கிரஸ் ஆட்சி அமையாது. மீண்டும் த.மா.காவைத் தொடங் குறதுதான் சரியா இருக்கும்னு சொல்ல, சிரிச்சபடியே உள்ளே போய்விட்ட வாசன் மறுநாள், கச்சத்தீவை மீட்க பிரதமரிடம் பேசுவேன்னு சொன்னாரு.''

""முன்னாள் மந்திரி கோமதி சீனிவாசன், பாடகர் அனிதா குப்பு சாமி, பேராசிரியர் தீரன் இவங்க ளெல்லாம் திடுதிப்புன்னு ஜெ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்திருக்காங்களே.''…""தலைவரே.. இதில் பேராசிரியர் தீரன் சேர்ந்தது பற்றி அ.தி.மு.க.விலேயே நிறைய கமெண்ட்டுகள் வருது. ஏன்னா தீரன் முதலில் பா.ம.க தலைவரா இருந்தாரு. அப்புறம் அதிலிருந்து விலகி தமிழ் பா.ம.க.ன்னு கட்சி ஆரம்பிச்சாரு. அப்புறம் அதை பா.ஜ.கவில் சேர்த்தாரு. அங்கேயும் நீடிக்காம, சங்கராச் சாரியார்கிட்டே போய் சேர்ந்தாரு. அதற்கப் புறம் பி.எஸ்.பி. கட்சியில் சேர்ந்த தீரன் அதிலிருந்தும் விலகி சீமானின் நாம் தமிழர் கட்சிக்குப் போனாரு. அங்கேயிருந்து பண் ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கடைசியா சேர்ந்தாரு. இப்ப அதி லும் நீடிக்காம அ.தி.மு.க.வுக்கு வந்திருக்கா ருன்னு தீரனே மறந்துபோன  கட்சிகளையெல் லாம் ஞாபகம் வச்சி கணக்கா சொல்றாங்க.''

""நான் ஒரு செய்தி சொல்றேன் .. ஜெ. கேட்டபடி, உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்குது. அதாவது மக்கள்கிட்டேயும் கட்சிக்காரங்ககிட்டேயும் ஒட்டாத மா.செ.க்கள் பற்றிய லிஸ்ட் அது. அதில் மூர்த்தி, ராஜேந்திர பாலாஜி, காமராஜ், ஆனந்தன், தோப்பு வெங்கடா சலம், மோகன், சம்பத், சுப்ரமணியம், லட்சுமணன், அர்ச்சுனன், உடுமலை ராதாகிருஷ்ணன், முத்து ராமலிங்கம் பெயரெல்லாம் இருக்குதாம். இவங் களோட மா.செ. பதவி விரைவில் டர்ர்ர்ர்.. ஆக லாம்னும் மந்திரியா இருக்கிற மா.செ.க்களுக்கு இரண்டு பதவியும் கிழியலாம்னும் கோட்டை வட்டாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு.''

 லாஸ்ட் புல்லட்!

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டரில் கருத்துப் பதிவு செய்யும் காகிதப்போராளிகள் நேரடிக் களத்திற்கு வருவதில்லை என்ற விமர்சனத்தை உடைத்திருக்கிறது முகநூல் சேனை அமைப்பு. டிமிடித் பெட்கோவ்ஸ்கி என்ற முகநூல் பெயர் கொண்ட பேராசிரியர் ராஜன் தலைமையில் சமூக வலைத்தளப் பதிவாளர்கள் ஆகஸ்ட் 30ந் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டு, ஈழப்பிரச்சினை மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றுக்காக மத்திய அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இல.கணேசன், சீமான் ஆகியோர் இப்போராட்டக் களத்திற்கு வந்து வாழ்த்தினர். 

சோனியா காந்தி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று குடல் கேன்சருக்கு சிகிச்சை எடுத்து திரும்பினார். கடந்த ஆண்டும் 10 நாட்கள் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்தார். இது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போதே அவருக்கு உடல்நலமின்றிப் போனதால், முழுமையாக உடல் செக்கப் செய்ய மீண்டும் அமெரிக்கா செல்கிறார்.

தே.மு.தி.கவிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி. ஆஸ்டின் தனது பழைய சகாவான திருநாவுக்கரசர் மூலம் காங்கிரசில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தி.மு.கவில் இணைவதற்கு ஸ்டாலின், கனிமொழி இருவர் தரப்பிலும் முயற்சி மேற்கொண்டுள்ளார் ஆஸ்டின்.

ad

ad