தேர்தலில் வாக்களிப்பை குறைக்க இலங்கை இராணுவம் தயாராகி வருகின்றது- சீ.வி.விக்னேஸ்வரன்
வட்டுக்கோட்டையில்
நேற்று நடைபெற்ற மாபெரும் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அலை கடல் என மக்கள் கூட்டம் திரட்டிருந்த இந்த பிரச்சாரக் கூட்டத்தில் இராணுவ புலனாய்வாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நேற்று நடைபெற்ற மாபெரும் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாகாண சபை வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு மேலும் விக்னேஸ்வரன் உரையாற்றுகையில்,
வடக்கில் மக்களுக்குரிய காணிகளில் மக்கள் மீளச் சென்று வசிக்க முடியாது அவர்களது காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
இராணுவம் நாளாந்தம் எங்களது வாழ்க்கையில் உள்ளே வந்து சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.
தமிழர்களின் வாழ்க்கையில் இராணுவம் எல்லா விடயங்களிலும் தலையிட்டு பிரச்சினைகளைத் தந்து கொண்டிருக்கின்றது
எனவே தமிழ் மக்கள் தமது வாக்குகளை விரைவாக சென்று கூட்டமைப்பு வழங்கி கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.