புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

 பறிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்குப் பெற்றுத் தர முடியுமா? இணக்க அரசியல் வாதிகளுக்கு சவால் விடுகிறார் சம்பந்தன் 
தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்படு வதையும் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதையும் தடுத்து, தமிழ் மக்களிடமிருந்து பலாத்காரமாகப் பறிக்கப்பட்டுள்ள
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொந்தக் காணிகளை மீண்டும் பெற்றுத்தர முடியுமா என இணக்க அரசியல் பேசுபவர்களுக்குப் பகிரங்க சவால் விடுத்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
நேற்று மாலை வடமராட்சி மாலு சந்தியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் இந்தப் பகிரங்கச் சவாலை விடுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் நடத்துகின்றது. நாம் இணக்க அரசியல் நடத்துகின்றோம். இணக்க அரசியல் மூலம் மட்டுமே தமிழ் மக்களுக்கு நன்மை களைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று பரப்புரை செய் கின்றனர்.
ஆனால் இதுவரை காலமும் இவர்கள் செய்த இணக்க அரசியலின் விளைவைப் பாருங்கள். வலிகாமத்தில் 6000 ஏக்கர் பொதுமக்களது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. கிளி நொச்சியில் எமது மண்ணில் இராணுவத்தினருக்காக 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படு கின்றன. 
முல்லைத்தீவில் எம் மக்களுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகள் பறிக்கப்பட்டு அவற்றில் இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர். வவுனியாவில் சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
மன்னாரில் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பலாத்கார மாகச் சுவீகரிக்கப்பட்டுள்ளன. கேப் பாபிலவில் பரம்பரையாக வாழ்ந்த விவசாயக குடும்பங்கள் கோம்பாவில் காட்டுக்கு விரட்டப்பட்டுள்ளனர்.
இவை எல்லாம் நான் நேரடியாகக் கண்டவை. இணக்க அரசியல் பேசுபவர்களால் இவற்றை எல்லாம் மீட்டுத்தர முடியும் என சவால் விடுகின்றேன். பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தத்தையும், டட்லி சேன நாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் கிழித்து எறிந்தது  போல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும், கிழித்து எறிய முயன்றனர். மாகாண சபைத் தேர்தலுக்கு முன் மாகாணசபைகள் சட்டத்தில் மாற்றம் கொள்ளவும் அதிகாரங்களை இல்லாதொழிக்கவும் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரமுயன்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந் தத்திலிருந்து தன்னிச்சையாக விலகவோ  மாற்றம் செய் யவோ முடியாது என நாம் ஆட்சேபித்ததோடு இந்தியப் பிரதமர் உட்பட இந்திய அர சியல் தலைவர்களைச் சந்தித் தும் முறையிட்டோம். இதன் பயனாக இந்திய அரசின் அழுத்தத்தினால் இந்தத் திட் டம் பிற்போடப்பட்டுள்ளது. 
இப்பொழுது நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் மூலம் இதனை வேறு வழியில் நடை முறைப்படுத்த முயன்று விடு கின்றனர். நாம் அதற்கு வரு போதும் இடமளிக்க மாட்டோம்.
போர் முடிந்து நான்கு ஆண்டுகளின் பின் வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட வுள்ளது. அதுவும் கூட இலங்கை அரசின் சுய விருப்பின் பேரில் நடத்தப்படவில்லை.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டுத் தீர் மானம், சர்வதேச நாடுகளின் வலியுறுத்தல், இந்தியாவின் அழுத்தம், நமது தொடர்ச்சியான பிரயத்தனம் காரணமாகவே தேர்தலை நடத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று நமது பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள் ளது. நாம் தர முடியாத எதையும் கேட்கவில்லை. நாம் நமது சொந்தத் தாய கத்தில் சுய நிர்ணய உரிமையுடன் நம்மை நாமே ஆளும் சுயாட்சி முறையைத்தான் கேட்கின்றோம்.
நமக்கென தனித்தேசியம், பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் எனத் தனித் துவங்கள் இருக்கின்றன. இவை பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் உள்ளடக்கிய சுய நிர்ணய உரிமை வேண்டும் பொருளாதாரம் மேம்பாடடைய வேண்டும்.
எமது இனத்துக்கு ஏற்பட்ட அவலங்கள், சீரழிவுகள்,மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும். காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டு விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோர் என சகலரது பிரச்சினைகளையும் ஐ.நா.மனித உரிமைகள் சபை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையிடம் நேரடியாகவே ஒப்படைத்துள்ளோம்.
எனவே இந்தமுறை நடை பெறவுள்ள மாகாணா சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படி வாக்களிக்கப் பேகின்றார்கள் என்பதை சர்வதேசம் மிகவும் அவதானமாக உற்று நோக்கு கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற நீங்கள் ஆணை வழங்க வேண்டும் இப்படி சம்பந்தன் குறிப்பிட்டார்.

ad

ad