புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

நல்லூரில் மலர் சொரிந்த ஹெலிகொப்டர் காற்றாடி பட்டு மரக்கிளை முறிந்து வீழ்ந்து பக்தர் படுகாயம்
யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் மலர் சொரிந்த ஹெலியின் காற்றாடி பட்டு மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் புலோலி மேற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஐங்கரன் (வயது 39)  என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போது ஹெலிகொப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்து பூக்களைச் சொரிந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஹெலிகொப்டர் காற்றாடியின் காற்று வேகத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வீதியிலிருந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து இவர் மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த இவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ad

ad