புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013




               பெண் பிள்ளைகள் மீதான வல்லுறவுக் கொடுமை வரிசையில், இன்னுமொரு சம்பவம்! அசராம் பாப்பு என்கிற 72 வயது சாமியார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிப் பிள்ளையைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.  நக்கீரன் 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலில் ஆசிரமம் ஒன்றைத் தொடங்கிய அசராம், இப்போது 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரமங்களைக் கொண்ட, உலகப் பிரபலமான சாமியாராக வலம்வருகிறார். தன் ஆசிரமங் களுடன், பழங்காலத்தைப் போன்ற குருகுலங்கள், மருந்து நிறுவனங்கள் என பலவற்றையும் நடத்து கிறார்.  இதில், மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள குருகுலமும் அடக்கம். இந்த குரு குலத்தில் 12வது படிக்கும் உத்தரப் பிரதேச மாணவி ஒருவரைத்தான், அசராம் பலாத்காரம் செய்துள்ளார். 

கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில், அந்த மாணவிக்கு தொடர்ந்து சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் குருகுலத்துக்கு விரைந்தனர்.  அவர்களிடம், வீட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு மாணவி கூறியிருக்கிறார். ஆனால், சாமியாரிடம் அழைத்துச் சென்றால் சரியாகிவிடும் என ஆசிரமத்தில் உள்ளவர்கள் கூற, பெற்றவர்களும் பக்தி சிரத்தையோடு, தலையாட்டி உள்ளனர். 
""மாணவியிடம் சில கெட்ட ஆவிகள் புகுந்துள்ளதாகவும் பேயோட்டி, சிறப்புப் பூஜை செய்தால் சரியாகிவிடும் எனவும் ஆசிரம சேவாதார் கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த சமயம், ராஜஸ் தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியிருந்த இருந்த சாமியார், அங்கு வருமாறு கூறியுள்ளார்.  அதைக் கேட்டு ஜோத்பூர், மனாய் ஆசிரமத்துக்குப் போனார் கள்.  ஆக.15-ம் தேதியன்று,  அங்குவைத்துதான் அந்தச் சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார்'' என்கிறார்கள் ஜோத்பூர் போலீஸார். 

முதலில், இந்தப் புகாரை போலீசார் நம்பவில்லை. மாணவியின் பெற்றோர்கள் அசராம் பாப்பு ஆசிரமத்தின் தீவிர பக்தர்கள் என்பதை அறிந்தபின் தான், போலீசின் விசாரணை சரியான திசைக்கு நகர்ந்தது. 

ஏற்கனவே, சாமியார் மீது ரூ.700 கோடி நிலப்பறிப்பு, 2 ஆசிரம சிறுவர்கள் கொலை என பல வழக்குகள், தாந்திரீக மோசடி என பல பிரச்சினைகள் உள்ளன. 

"ஜோத்பூரில் இருந்து ஆக.11-ம் தேதியே, சாமியார் கிளம்பிவிட்டார்' என்று ஆசிரமத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்கடே என்பவர் சொல்ல... ஆசிரமம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் ரஞ்சித் தேவ் ராவோ, "10, 11 தேதிகளில் நடந்த- தீட்சை அளிக்கும் சத்சங் நிகழ்ச்சிக்காக, ஆக.9-ம் தேதியே வந்துவிட்டார். சத்சங் நிகழ்ச்சி முடிந்தபிறகு, பெரும்பாலும் தனியாகவே இருந்தார்.  தீவிரமான பக்தர் களைக்கூட அவருடைய முக்கிய அறைக்கு அனுமதிக்கவில்லை. அதேநேரம், குறிப் பிட்ட சில பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தார். 16-ம் தேதி காலையில்தான் இங்கிருந்து கிளம்பினார்'’என்று போட்டு டைத்தார். 

ஆனால், "72 வயதான எனக்கு, ஆண்மையே போய்விட்டது...  அந்தச் சிறுமி என் மகளைப் போன்றவள்.. தயவு செய்து, அவளை வல்லுறவுக்குள்ளாக்கப் பட்ட சிறுமி எனக் கூறாதீர்கள்.. தூய்மை யானவள்' எனப் பலவாறாக விரிவுரை செய்தார். பத்தாயிரக்கணக்கான பக்தர் களைக் கட்டிப்போட்ட அவரது பிரசங்கம், எடுபடாமல் போனது. 

30-ம் தேதிக்குள் விசாரணைக்கு வருமாறு, அசராம் பாப்புவுக்கு ஜோத்பூர் நகர போலீசார் உத்தரவிட, பாப்பு, எஸ்கேப். 14 பேரைக் கொண்ட ராஜஸ்தான் போலீஸ் தனிப்படை, பாப்பு சேஸிங்கை முடுக்கிவிட்டது. இந்தூரில் உள்ள ஆசிரமத்துக்குள்தான் சாமியார் ஒளிந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அங்கு ஆஜரானது, தனிப்படை. 

வேறு வழியின்றி, பாப்புவின் மகனான சின்ன சாமியார், நாராயண் சாய், "பாப்புஜிக்கு உடல்நலம் சரியில்லை. அவர் சரியானதும், ராஜஸ்தான் போலீசார், எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து விசாரிக்கலாம்' என்று சொல்லிப் பார்த்தார். 

கடந்த 31-ம் தேதி சனிக்கிழமை மாலையில், போலீஸை உள்ளே போகவிடாமல் தடுப்பு அரண் அமைத்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களைக் கடந்து உள்ளே சென்றது, ஜோத்பூர் போலீஸ் தனிப்படை. 

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்ட போலீசாரிடம், "இப்போதைக்கு நான் ஓய்வெடுக்க வேண்டும்' என தனி அறைக்குள் போய்விட்டார்.  சிறிது நேரத்தில் அவராகவே வெளிவந்த போது, பிடிக்குள் கொண்டுவந்தனர், ஜோத்பூர் போலீசார். 

அங்கிருந்து அசராமைக் கொண்டு வருவதற்குள், தனிப்படை போலீசார் தவித்துப் போனார்கள்.  இந்தூரில் இருந்து கிளம்பும் முன்பே, அவருக்கு நெஞ்சுவலி (அந்த ஊர்லயுமா) வந்துவிட்டது.  உடனே, இந்தூர் மருத்துவக் கல்லூரி  நிபுணர் குழுவினர் வந்து, நார்மல்தான் என உறுதிப்படுத்தி, அங்கிருந்து  விமானம் கிளம்ப, மறுநாள் காலை ஆகிவிட்டது. 

டெல்லியில், கடந்த நவம்பரில் மருத்துவ மாணவி வல்லுறவுக் கொடுமையைக் கண் டித்து எந்த இடம் போர்க்களமாக்கப் பட்டதோ, அதே ஜந்தர்மந்தர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, அசராமுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்! 

ஆனால், ஜோத்பூரில் அசராம் தரையிறங்கியபோது, காட்சி வேறு மாதிரியாக இருந்தது. பெண்ணுரிமையாளர் கள் ஒரு பக்கம் கருப்புக் கொடிகளுடன் ஆவேசத்துடன் போராட, பக்தகோடிகள் ஒதுங்க வேண்டியதாயிற்று. 

விறுவிறுப்பாக முடிந் தவைகளைத் தொடர்ந்து, பாப்புவுக்கு ஜோத்பூரில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.  அவருடைய ஸ்டேட்மெண்ட்டுக்கு அப்படியே திருப்பிப் போட்டதுபோல, வந்தது, பரி சோதனை முடிவு. 

அகில இந்திய அளவில் இது ஒரு பக்கம் நடக்க, பாலியல் சாமியார் நித்யானந்தாவுக்கும் பாப்புஜிக்கும் இடையிலான நட்புதான், இதில் மேட்டரே என்கிறது, ஆசிரமத் தரப்புகள். முன்பு, நித்தி கையும் களவுமாக மாட்டிக் கொண்டபோது, ஆதரவுக் குரல் கொடுத்து, வடக்கில் உள்ள சாமியார்களைக் கிளப்பி விட்டதில், பாப்புவுக்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது. அதேபோல, இப்போது பாப்பு மாட்டிக்கொண்டதும், இந்த வகையறா சாமியார்களைத் திரட்டி, போலீஸ் நட வடிக்கைகளை எதிர்கொள்ள உதவுவதில் இறங்கியுள்ளதாம், நித்தி தரப்பு. 

ad

ad