புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

நவி.பிள்ளையைச் சந்தித்தவர்கள் சித்திவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து விசாரணை தேவை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த மக்களை இலங்கைப் படையினர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கண்காணிப்பகம் கோரியுள்ளது.
தமது விஜயத்தின் போது சந்தித்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது படைத்தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டதாக தமது விஜயத்தின் இறுதியில் குற்றம் சுமத்திய நவநீதம்பிள்ளை, இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறையிடப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கருத்துரைத்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய தலைவர் பிரட் அடம்ஸ், அரசாங்கத்தினால் அழைக்கப்பட்ட இராஜதந்திரி சந்தித்தவர்களை அரசாங்க அதிகாரிகளே சித்திரவதை செய்வது வெட்ககேடான செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அந்த அதிகாரிகளை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ad

ad