புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

தீயில் ஆகுதியான வீரத் தமிழன் செந்தில்குமரனுக்கு சுவிஸில் இடம்பெற்ற வணக்க நிகழ்வுகள்
ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரனன் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் குறுகிய கால ஏற்பாட்டில், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில், சுவிசின் பல பாகங்களிலிருந்தும் கனத்த இதயங்களுடன் மக்கள்
கலந்துகொண்டு வீரத்தமிழ்மகன் செந்தில்குமரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்குரிய ஈகைச்சுடரினையும், மலர்மாலையையும் அவரது தந்தை அணிவித்து வணக்க ஒன்றுகூடலை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் வீரத்தமிழ் மகன் செந்தில்குமரனின் அளப்பரிய தியாகத்தின் நினைவுகள் சுமந்த வணக்க உரைகள் இடம்பெற்றதுடன், ஈகைப்பேரொளியினால் இறுதித் தருணத்தில் அவர் தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்து விட்டுச் சென்ற அவரின் இலட்சிய அவாவின் வேண்டுதல் அவரின் குரலில் ஒலிக்க விடப்பட்ட போது. கலந்து கொண்டிருந்த மக்களின் கண்களில் நீர் சொரிந்து கனத்த இதயங்களுடன் காணப்பட்டனர். கொலம்பஸ் ,சிவலோகநாதன்,சண்-தவராசா ,செ .சுரேஷ் ,ராசன் ஆகியோர் வீர வணக்க உரைகளை நிகழ்த்தினர் 
அத்துடன் எதிர்வரும் நாளை 12.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இறுதிவணக்க நிகழ்வு இடம்பெற இருப்பதுடன், எதிர்வரும் 16ம் திகதி திங்கட்கிழமை அன்று ஐ.நா சபை முன்றலில் இனவழிப்பிற்கு நீதிகேட்டு மீண்டும் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென்று உறுதியெடுக்கப்பட்டதோடு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் வணக்க ஒன்றுகூடல் நிறைவுபெற்றது.

ad

ad