புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

ரஞ்சனியை திருப்பியனுப்ப வாய்ப்பில்லை! ஏசியோவின் குற்ற அறிக்கை புறந்தள்ளப்படலாம்
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் இன்று முக்கிய வழக்கு ஒன்றின் பங்காளியாக உள்ள ரஞ்சனி என்ற பெண், விடுதலைப்புலி உறுப்பினர் என்று அடையாளம் காணப்பட்ட போதும் அவரை திருப்பியனுப்ப வாய்ப்பில்லை என்று சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் ரஞ்சனி உட்பட் 47 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் ரஞ்சனி, தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் இணங்கியது.
எனினும் அவர் விடுதலைப்புலிகளின் சிறுவர் போராளி பயிற்சியாளராக இருந்தார் என்று ஏசியோ என்ற அவுஸ்திரேலியா புலனாய்வு சேவை நீதிமன்றத்துக்கு குற்ற ஒப்புதல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ரஞ்சனி அங்குள்ள தமது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளை விட்டு இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியாது என்று அவரின் சார்பில் நீதிமன்றத்தில் அனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அவரின் மூன்று பிள்ளைகளும் கணவரும் அவுஸ்திரேலிய பிரஜைகள் என்ற காரணமும் கூறப்பட்டுள்ளது.
எனவே ரஞ்சனி விடயத்தில் ஏசியோவின் அறிக்கை புறந்தள்ளப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ad

ad