புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013



           புதுவை மாநில ரவுடிகளின் அட்ட காசங்களைப் பற்றி ’ஆக. 31-செப் 3’ தேதியிட்ட நக்கீரனில் "ரவுடிகளுக்கு முதல்வரா?' என்ற தலைப்பில் ஹாட் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியை பார்த்த புதுவை மாநில வியாபாரிகள் அங்கங்கே கூடினர். "இந்த அரசாங்கம் நமக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நக்கீரன் பத்திரிகை நமக்கு
ஆதரவா இருக்கு. அதனால் இனி ரவுடிகளுக்கு நாம பயப்படக் கூடாது. யாரும் மாமூல் கொடுக்கக் கூடாது. மிரட்டினால் தைரியமா போலீஸுக்கு போகணும்'னு என முடிவெடுத்த தோடு, மாமூல் கொடுப்பதையும் முழுதுமாக நிறுத்திவிட்டனர்.நக்கீரன் 

இதேபோல் ரவுடியின் மிரட்டலால் லாங் லீவில் டி.ஐ.ஜி. சுக்லா போய்விட்டார் என்று நமது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அவரும் அவரது சீட்டில் வந்து உட்கார்ந்துவிட்டார். 4-ந் தேதி புதுச்சேரி வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்த டி.ஐ.ஜி. சுக்லா ""இங்க ரவுடிகள் மாமூல் வசூலிப்பது பத்தி, பத்திரிகையில் பெருசா வருது.  நீங்கள் மாமூல் கொடுப்பதால்தான் ரவுடிகள் கேட்கிறாங்க. இனி நீங்க கொடுக்காமல் இருங்க. என்ன பண்றானுங்கன்னு பார்க்கலாம்''’என்றார். 

நம்மிடம் மனம் விட்டுப்பேசிய, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கலிய பெருமாள் ""புதுச்சேரி ரவுடிகளோட போலீஸ் கூட்டணி வச்சிருக்கு. உதாரணமா காரைக்கால்ல நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன். அங்க பிரபலமான சாராய வியாபாரியான ராமுவை, வியாபார போட்டியில் ஐய்யப்பன் கொலைபண்ணிட்டான். இதில் கொதிச்சிப்போன ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி, தன் ஆளுங்களோட போய், ஐய்யப்பனை போன மாசம் தீர்த்துக்கட்டிட்டா.  விசயம் இது இல்லை. அந்த எழிலரசி உள்ளிட்ட குற்றவாளிகளை காரைக்கால் கோர்ட்டுக்கு இங்க இருக்கும் சிறையிலிருந்து அழைச்சிக்கிட்டுபோய் ஆஜர்படுத்திட்டு திரும்பும்போது, எஸ்கார்டா வந்த ஏ.எஸ்.ஐ.கோவிந்தன், கலியபெருமாள், காஞ்சன், துளசியம்மாள், ஜிகிதர், பிரபு, கவிதாசன் உட்பட 9 காக்கிகள் வாகனத்தை வழியில் நிறுத்தி, குற்றவாளிகளோட சேர்ந்து சரக்கு அடிச்சிட்டு, மூக்குமுட்ட பிரியாணியையும் சாப்பிட்டுவிட்டு ஜாலியா திரும்பியிருக்காங்க. அதோட சிறையில் குற்றவாளிகளுக்கு ’ஹாய்’ சொல்லி பிரிஞ்சிருக்காங்க. 

குற்றவாளிகள் கொடுத்த பணத்தைப் பங்கு பிரிச்சிக்கிற பிரச்சினையில், மேலதிகாரிகள் காதுக்கு இவங்கள்ல சிலரே இந்த விவகாரத்தைக் கொண்டுபோய்ட்டாங்க. இப்ப அந்த 9 காக்கிகளும்  சஸ்பெண்ட் ஆகியிருக்காங்க.  ஒரு  ஃபேக்டரி அதிபரைக் குறிவச்ச ஒரு ரவுடி, அவரிடம் ஒரு பெண்ணை பேச வைச்சி, ஸ்டார் ஓட்டலுக்கு போய் அவரோட உல்லாசமா இருக்கவச்சி, அந்தக் கண்றாவியை வீடியோவா எடுத்து, அதைக் காட்டி  மிரட்டியே அவர்ட்ட பணம் பறிச்சான் அந்த ரவுடி. 



இன்னொரு கொடுமை என்னன்னா, ஒரு நேர்மையான துடிப்பான அதிகாரியை, இதேபோல் ஒரு பெண் மூலம் வலையில் சிக்கவச்சி, அவருக்கே தெரியாம படம் எடுத்துட்டானுங்க. பிறகு ஒருநாள் ஜெயில்ல இருந்து அவரை தொடர்புகொண்ட ஒரு ரவுடி, "இப்ப உன் வீட்டு வாசல்ல எங்க ஆளுங்க இருப்பாங்க போய்ப் பாரு'ன்னான். அங்க அவரோட படங்களோடு ஆளுங்க நின்னானுங்க. எல்லாரையும் மிரளவைக்கிற அந்த அதிகாரி, மிரண்டுபோய்ட்டார். ஏறத்தாழ ரெண்டுலட்ச ரூபா அவனுங் களுக்குக் கொடுத்திருக்கார். இதில் ஒரு வேடிக்கை என்னன்னா சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு எஸ்.பி. பதவியில் இருக்கும் போது ரவுடிகள்ட்ட மாமூல் வாங்கியிருக்கார். அவர் ரிட்டையர்டு ஆனதும், "இப்ப நீ எங்களுக்கு மாமூல் கொடு'ன்னு மிரட்ட ஆரம்பிச்சிட்டானுங்க.'' என கிறுகிறுக்க வைத்தார்.

புதுவை வியாபாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாலுவோ ""மூணு வருசத்துக்கு முன்ன, இங்க இருக்கும்  இந்திரா சிலையிலிருந்து மரப்பாலம் வரை இருக்கும் மார்பிள்ஸ், கிரானைட்ஸ் வியாபாரிகளிடம்  நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வீதம் ஒரு கும்பல்  மாமூல் வசூலித்தது. அதைப் பங்கு பிரிக்கும்  பிரச்சினையில் 6 கொலைகள் நடந்துச்சி. இது போலீஸ் ரெக்கார்டிலேயே இருக்கு. புதுச்சேரியில் இருக்கும் 15 ஆயிரம் கடைகளில், 10 ஆயிரம் கடைகளில் ரவுடிகள் மாமூல் வாங்கினாங்க.  ரவுடிகளின் மாமூல் தொல்லையைக் கண்டிச்சி 27-ந் தேதி மாபெரும் கடையடைப்பு போராட்டம் செய்தோம். இப்ப என்ன நடக்குது தெரியுமா?. ஏ-ஒன் ஃபுட் லேண்டு’ கடையில் தந்தூரி சிக்கன் பார்சல் வாங்கிய ஒரு ரவுடி, கடைக்காரர் காசு கேட்டதும், "என்னாடா புதுசா காசு கேட்கிறே'ன்னு கடையை உடைக்க ஆரம்பிச்சான். அடுத்த நொடியே போலீஸ் வந்து, அவனை செமையா கவனிச்சி அள்ளிக்கிட்டுப் போச்சு. இப்பதான் வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வும், தைரியமும் வந்திருக்கு'' என்றார் உற்சாகமாய்.

கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர் நம்மிடம் ""கடை அடைப்பு போராட்டம் செய்துவிட்டு, ஐ.ஜி. கிருஷ்ணய்யாவை சந்திச்சோம். "இனி யாராவது மாமூல் கேட்டா, அடிங்க, வெட்டுங்க, நாங்கள் பார்த்துக்கறோம். அவனுங்களை நாங்கள் கஷ்டப்பட்டு பிடிச்சா, கோர்ட் வெளியில் விட்டுடுது. கொலைக் குற்றவாளி மீது சார்ஜ் சீட் போடுவதற்குள் அவனை  வெளியில் விட்டுடுறாங்க'ன்னு எங்கக்கிட்ட கொந் தளிச்சார்.  இங்க ரவுடிகளை அடக்க ணும்ன்னா, தமிழக அரசு மாதிரி குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போதே அவங்க மேல குண்டாஸ் போடணும். சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருக்கும் ஒரு ரவுடி, ஒரு எஸ்.பி.யை போனில் கூப்பிட்டு, "நீ ஓய்வு பெற இரண்டு மாதம்தான் இருக்கு. எங்களை ஒடுக்க நினைக் காதே, அப்புறம் உன்னைக் காப்பாத்த யாரும் இல்லை'ன்னு மிரட்டியிருக் கான். நிலைமை எப்படி இருக்கு பாருங்க. நாங்க கடையடைப்புப் போ ராட்டத்தை நடத்திய பிறகு முதல்வர் ரெங்கசாமியைப் பார்த்து, "ரவுடிகளை குண்டாஸில் உள்ளே தள்ளுங்க'ன்னு கோரிக்கை வச்சோம்.  முதல்வரோ, "நீங்க யாருடைய தூண்டுதல்ல இப்படி போராட்டம் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும்'னு எரிஞ்சி விழுந்ததோட, "குண்டாஸ் போடறதுன்னா சாதாரண விசயமா'ன்னு எங்கக்கிட்டயே திருப்பிக் கேட்கிறார். ரெண்டு வருசத்துக்கு முன்ன அவர் வீட்டு வாசலில் வச்சே நொண்டி ஆறுமுகம்ங்கிற  ரவுடியை ஒரு கும்பல் போட்டுத்தள்ளுச்சி. இதன் பிறகு கூட ரவுடிகளை ஒடுக்கணும்ன்னு முதல்வர் நினைக்கலையே. ஆனா ஒண்ணு, நக்கீரன்ல புதுவை ரவுடி களைப் பத்தி செய்திவந்த பிறகு, இங்க இருக்கும் போலீஸ்கிட்ட ஒரு வேகம் தெரியுது''’என்றார் அழுத்தமாய்.

ரவுடிகளை ஒடுக்க, இனியாவது புதுவை முதல்வர் மனம் வைப்பாரா?

ad

ad