புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

இலங்கையில் நவி.பிள்ளை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டமை தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கவனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவரை சந்தித்து பேசிய மக்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் பலர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் தொழிற்நுட்ப உதவிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை பேரவையின் 24 வது அமர்வில் இன்று உரையாற்றிய ஜெனிவாவுக்கான அமெரிக்க பிரதிநிதி எய்லின் சம்பர்லின் டொனஹோ, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தை வரவேற்றுள்ளார்.
நவநீதம்பிள்ளை மனித உரிமைகள், சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி தொடர்பில் அக்கறை செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை நவநீதம்பிள்ளையின் அண்மைய இலங்கை விஜயத்தை வரவேறுள்ள ஐரோப்பிய ஒன்றியம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டது.
அத்துடன் நவநீதம்பிள்ளையின் விஜயத்தின் போது அவரை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் பற்றியும் ஒன்றியம் கவலை வெளியிட்டது.
இதனிடையே பிள்ளை சந்திக்க மக்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் ஜெர்மனி தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படும் நிலைமையை இது காட்டுகிறது என்று ஜெர்மனிய பிரதிநிதி குறிப்பிட்டார்.
இதேவேளை மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஒஸ்ரிய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

ad

ad