புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013


         "காய்'’ விட்டுக்கொள்ளும் சூரியன், மாம் பழம் தலைமைகள், ஒன்றுபோல ஆகி இருக் கின்றன; என்ன கதை இது? அம்மை ஆட்சியின் ஊழல் விவ(கா)ரங்களைத் தோண்டி, மக்கள் மன்றத்தில் வைக்க, கட்சியினரைத் தயார் செய்கிறது, மாம்பழத் தலைமை. இதேபோல,
சூரியன் தரப்பும், ஆட்சியின் மாட்சியைப் பற்றி, காட்சிப்படுத்தும் ஆவணங்களைத் தேடும் காரியத்தை முடுக்கிவிட்டுள்ளது. சூடு பிடிக்குமா?மகீரன் 

ரசாங்க வரவு செலவை ஆயும் துறையை, இயக்குறவர், கயிலை நாமக்காரர். இவரால் மொத்தத் துறையுமே அல்லோலகல் லோலம்! புது உதவி ஆய்வுக்காரர்கள் 350 பேர், பதவி உயர்வால் ஆய்வுக்காரர்களாகும் 200 பேர் என 550 பேரிடமும், 2 லகரம்வரை தந்தால்தான், கேட்ட இடத்தில் நியமனம்னு, வெளிப்படை யாகவே சொல்லியிருக்கிறார். ஞாயம் கேட்ட வர்களிடம், "மந்திரியைப் போய் பாருங்க'’என்கிறாராம், பட்டென. பதவி போகப் போகுதுனே முடிவு செய்திட்டீங்களா, பன்னீரு வாசமே?

ம்பரக் கட்சியின் தேர்தல் பிரிவுப் பொறுப் பாளர், சூரிய கட்சியில் கலந்துவிட்டார். இது பற்றி நிர்வாகிகள் சிலர், கருப்பு சால்வைத் தலைவரிடம் விசும்பியிருக்கிறார்கள். அவரோ, ’’ "ஏற்கனவே அங்கே போன, எ..ஜி, செ..ஜி எல்லாம், மாவட்டச்செயலாளர்கூட மதிக்காத நிலை யிலதான் இருக்காங்க. இவரும், போய் நல்லா இருக்கட்டும்ங்க. அதை ஒரு விசயமா கேக்கீங்களே, வேலையைப் பாருங்க'’என்றாராம், சிரிக்காமல்! 

போர்க்குற்றம் செய்தவனின் ராஜ்ஜியத் தில், பொதுநலவாய மாநாடு நடத்தாதே! என்பதற்காக, வேறு மொழிக்காரர்கள் பலரும் பங்கேற்கும் ஒரு இளைஞர் மாநாடு, தலைநகரத்தில நடக்குது. வழக்கம்போல, நுங்கு பாக்கம் தொடர்வண்டி நிலையப் பக்கத்து கல்லூரியில், ஏற்பாடுகளும் மும்முரமா நடந்துச்சு. திடீர்னு, கல்லூரி தரப்பில் இருந்து, இந்த முறை வேண்டாமே என்க இடம் மாறிடுச்சு. டெல்லி ஒற்றர் துறையே நேரடியா கல்லூரி நிர்வாகத் திடம் பேசினதுதான், காரணமாம்! 

கோடைக்குப் போகவேண்டிய மலை நாட்டுக்கு, கண்டநேரத்தில் போகும் மம்மி, ஊருக்குத் தெரியாமல் கட்சிக்காரர்களுக்கு ஒரு நல்ல காரியம் செய்கிறார், நம்புங்க! 40 லகரத்தில் தொடங்கி கோடியை நெருங்கும் வைத்தியப் படிப்பில், முடியாத குடும்பத்து கட்சிக்காரப் பிள் ளைகளை சேர்த்து விடுகிறாராம். இந்த ஆண்டு மட்டும், இப்படி 10 பேர் வைத்தியப் படிப்பில் நுழைந்து இருக்கிறார்களாம், ஒரு காசும் கொடுக்காமல்! நல்லதை யார் செய்தால் என்ன?

ம்மை கட்சிக்கும் எங்களுக்கும் உள்ள உறவைக் கெடுக்க காக்கி அதிகாரிங்க சதினு, சமீபத்தில் பேசினார், பாண்டிய நாட்டு சிவப்பு சால்வைத் தலைவரு. அந்த சதி இன்னும் வெளிவராத நிலையில், ஒரு சொல் மாறுன தால, கட்சிக்குள்ள ஒரே களே பரமாப் போச்சு. மாநிலத் தலைவரான அவரை, அவங்க பத்திரிகையின் முதல் பக்க விளம்பரத்தில், மாவட் டச் செயலாளருன்னு போட் டுட்டாங்க! தட்டச்சுப் பிழை தானா, இல்ல சதி ஏதுமா, அய்யா? 

தென்பகுதியில் கடந்த ஆண்டு ஏழு பேர் குண்டுவீசிக் கொல்லப்பட்ட வழக்கில், 5 பேர் சே----ம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான தே.பா.சட்டத்தை, ஞாயமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. ஆனால், சிறைவாசலில் வைத்தே, அவர்களை வேறு வழக்கில் உள்ளே போட்டுவிட்டார்கள். இவர்களுக்கு, குலம்... புலி என கொலை மிரட்டல்கள் வர... 5-ல் ஒருவரை சூட்டுக்கொலையில் போட்டுவிட்டால், எதிர்த்தரப்பு அடங்கிவிடும் என சில காக்கிகள் பேசியது கசிய... பதற்றம் உண்டாகி இருக்கிறது! என்ன நடக்குமோ?

ad

ad