புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

தலைவர் மகன் எனது மாணவன்: மலையாளப்புரத்தில் சிறீதரன் MP காட்டம்.. - 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி மலையாளப்புரக் கிராமத்தில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் த.சேதுபதி தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.

இப் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், பா.அரியநேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா, வடமாகாணசபைக்கான தேர்தல் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தனது உரையில்
“நான் ஒரு தலைவனைப் பற்றிச் சொல்லுகின்ற போது, பிரபாகரன் என்ற நாமத்தைச் சொல்கின்றபோது கைதட்டுகிறீர்கள். போராட்டம் பற்றிச் சொல்கிறபோது கைதட்டுகிறீர்கள். எனது மைத்துனர் பற்றிச் சொல்கிற போது கை தட்டுகிறீர்கள். ஏனென்றால் உங்களிடம் ஒத்த உணர்வு இருக்கிறது. எங்கள் அனைவரிடமும் ஒரே இரத்தம் ஒரே சிந்தனை ஒரே இலக்கு இருக்கிறது என்பதற்கு இதைவிட எங்களுக்கு வேறு உதாரணம் தேவையில்லை. எங்களுடைய சிந்தனைகளும் உணர்வுகளும் வேறுபட்ட திசைகளில் செல்லவில்லை. நாங்கள் ஒரு இலக்கு நோக்கி, ஒரு இலட்சியம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எமக்கருகேயும் எம்மோடு பலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களும் அதே இலட்சியக் கனவோடுதான் வருகிறார்களா என்பது எமக்குத் தெரியாது. ஆகவே அவர்களையும் அந்த இலட்சியம் நோக்கி ஒடவைக்கவேண்டும். அதுதான் உங்கள் முன்னுள்ள பெரிய பணி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வடமாகாண சபைத் தேர்தலில் வெல்லப்போகிறது என்பது உறுதியானது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆசனங்களை வெல்வதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையினைப் பெற்று அன்று யாழ்ப்பாணத்தில் இராணுவத் தளபதியாக இருந்து ஆயிரக்கணக்கானோரைக் கொன்று இப்போராட்டத்தை நசுக்க உதவிய ஆளுனர் சந்திரஸ்ரீயிற்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டுவரமுடியும். நாங்கள் சட்டத்தின்படி நியாயத்தின்படி தர்மத்தின்படி போட்டியிடுகிறோம். ஆகவே எங்கள் நியாயம் வெல்லும். இந்த மண்ணிலே 1956ம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்ட மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களது உயிர்களும் அவர்களது இரத்தங்களும் தசைகளும் எங்களது ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளினதும் தியாகங்களும் இந்த மண்ணிலே எங்களுக்கு நியாயத்தைத் தரும் என்ற 100 வீத நம்பிக்கை எம்மிடம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இப்பரப்புரைக் கூட்டத்தில் பா.அரியநேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா, வடமாகாணசபைக்கான தேர்தல் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொலி வடிவத்தைக் கீழே காணலாம்.




malajalapurim_tnamalajalapurim_tna1malajalapurim_tna2malajalapurim_tna3malajalapurim_tna4malajalapurim_tna5malajalapurim_tna6
- See more at: http://www.newsjvp.com/srilanka/47051.html#sthash.5pf7PzzA.dpuf

ad

ad