புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

 பிரத்தானிய பிரதமர் உதயனுக்கு விஜயம்
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.
தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரும் கையொப்பங்கள் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கையளிப்பு
 [ சண்தவராசா ]
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திச் சேகரிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் வியாழன் பிற்பகல் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

ஜெயலலிதா மற்றும் விஜயதாரணியை அசிங்கமாக திட்டிய தமிழ்தாசன் கைது

சத்தியம் டிவியில் சத்யம் சாத்தியம் என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன் விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணியும், பாஜக சார்பில்
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் மீது கழிவொயில், கல்வீச்சு தாக்குதல்: இராணுவத்தினர் அட்டகாசம்
வலி.வடக்கில் மேற்கொள்ளப்படும் நில மீட்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கென யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினர் ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு பல இடங்களில் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
23வது பொதுநலவாய மாநாடு அங்குரார்ப்பணம்!: நாட்டின் மனித உரிமையுடன் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் 23வது மாநாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
விசேட விமானத்தில் யாழ். சென்ற பிரி. பிரதமர் கமரூன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சற்று முன்னர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம் - அனைத்துலக பிரசன்னத்தின் முன் கண்ணீர் மல்க காத்திருந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம்!

அனைத்துலககத்தின் பிரச்சன்னத்தை வெளியேற்றி விட்டு சாட்சியமற்ற போரினை தமிழர்கள் மீது நடத்திய சிங்களம், தற்போது அனைத்துலகத்தின் பிரசன்னத்தின் முன்னேயே தமிழர்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை யாழ் மண்ணில் காட்டியுள்ளது.
வடக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை நிறுத்துங்கள்! எச்சரிக்கும் இராணுவம்
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் தமிழர்களை ஆத்திரமடைய செய்துள்ளதாக சர்வதேச செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
கே.பியிடம் விசாரணை நடத்த இலங்கையிடம் உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்த்திருக்கும் சி.பி.ஐ!- இந்துஸ்தான் டைம்ஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடனான தொடர்புகள் பற்றி கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் முறையான விசாரணைகளை நடத்த இந்திய மத்திய விசாரணை பிரிவினர் (சி.பி.ஐ) இலங்கையின் உத்தியோகபூர்வமான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ்
எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல  கவி வீச்சு ,கரு ப்பொருள்,  கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன் 

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!

ஆக்கம்: அ.பகீரதன்

இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?

படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?

அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?

முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?

பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா

அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே

முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

நன்றி.
அ.பகீரதன்

மனித உரிமை மீறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும்: கொமன்வெல்த் நாடுகளுக்கு வலியுறுத்து
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
இலங்கையில் பாலியல் வன்கொடுமை! இராணுவத்தினர் மீது குறித்து விசாரணை நடத்த பிரிட்டன் வலியுறுத்தல்
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம்
இலங்கையின் மொழி உரிமைகள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மனப்பூர்வமான ஈடுபாட்டை பாராட்டி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு
வடக்கு மாகாணத் தேர்தலுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அதிகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  நேற்று  வியாழக்கிழமை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு கெழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த குறித்த தடையுத்தரவு இன்றும் நாளையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அரசின் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்பு

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களை தனித்தனியாக அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய
மதிப்புக்குரிய ஆறுமுகம் அரியரத்தினம் அவர்களின்,70வது பிறந்த தினத்தை புங்குடுதீவு மடத்துவெளி சனசமுகநிலையம்-கனடா கிளை வாழ்த்திக் கௌரவித்தது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டேன் : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு அழைப்புக் கிடைத்தாலும் செல்லமாட்டேன் என வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார்.

மெக்ரேயை மங்கள சந்தித்தமையானது டி.எஸ்.சேனநாயக்கவின் கன்னத்தில் அறைந்ததுக்கு சமம்: அரசாங்கம்

இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் செய்யும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது தேசப்பற்று கொண்ட டி.எஸ்.சேனநாயக்கவின் 'கன்னத்தில் அறையும்" செயலாகும்

செனல் - 4 ஊடகக் குழுவினர் பணத்தை செலுத்தவில்லையென வாடகை வாகன சாரதி பொலிஸில் முறைப்பாடு

செனல் - 4 ஊடகக் குழுவினர் தமது வாடகை பணத்தை செலுத்தாது சென்றுவிட்டதாக வாடகை வாகனத்தின் சாரதி எஸ். கே. சஞ்ஜீவ டி சில்வா கொம்பனித்தொரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
West Indies 182
India 157/2 (34.0 ov)
சூடுபிடிக்கும் பொதுநலவாய விவகாரம்: வட அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்
பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் சிறிலங்கா அனைத்துலக அரங்கில் விவாதப்பொருளாக மாறியுள்ள சமகாலத்தில், அதனையொட்டிய மக்கள் போராட்டங்கள் தாயகத்திலும் வெளியிலும் இடம்பெற்று வருகின்றன.

ad

ad