புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

நவநீதம்பிள்ளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம்
இலங்கையின் மொழி உரிமைகள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மனப்பூர்வமான ஈடுபாட்டை பாராட்டி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
2013ம் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதியிட்ட கடிதத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடும் அமைச்சரின் முன்மொழிவுக்கான தனது ஆதரவை, நவநீதம்பிள்ளே தெரிவித்துள்ளார்.
மொழி தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை செயற்படுத்துவதில் தங்கள் பிரத்தியேக முன்னெடுப்புகளையும் மனப்பூர்வமான செயற்பாடுகளையும் நான் பாராட்டுகிறேன்.
மும்மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடும் தங்கள் முன்மொழிவை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆதரிக்குமென நான் நம்புகின்றேன். இது நல்லெண்ணத்தின் அடையாளமாக இருக்குமென நான் நம்புகின்றேன் என அவர் கூறியுள்ளார்.
காழ்ப்புணர்ச்சியை தூண்டுதல் தொடர்பில் சட்டங்கள் ஆக்கப்பட வேண்டுமெனும் அமைச்சரின் அறிவிப்பை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வரவேற்றுள்ளார்.
சிறுபான்மையினர் விவகார ஐ.நாவின் சுயாதீன நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு ஆணையாளர் தனது ஆதரவை உறுதியளித்துள்ளார்.
இது ஒரு நீண்டகால வேண்டுகோள் என அவர் கூறியுள்ளார்

ad

ad