புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரும் கையொப்பங்கள் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கையளிப்பு
 [ சண்தவராசா ]
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திச் சேகரிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் வியாழன் பிற்பகல் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.





சர்வதேச மன்னிப்புச் சபையின் சுவிஸ் கிளை, அச்சுறுத்தப்பட்ட இனங்களுக்கான அமைப்பு, அகதிகளுக்கான உதவி நிறுவனம் ஆகியவை மேலும் பல நிறுவனங்களின் ஆதரவோடு மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தக் கையெழுத்துக்களைச் சேகரித்திருந்தன. இந்தக் கையெழுத்து சேகரிப்பு நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்புக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கூடப் பங்கெடுத்து இருந்தனர்.

வியாழன் பிற்பகல் பேர்ண் நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வைசன்ஹவுஸ் பிளற்ஸ்சில் கூடிய பிரதிநிதிகள் சிறிய ஊர்வலமாக நாடாளுமன்ற முன்றல் வரை சென்று அங்கு ஒரு கவன ஈர்ப்பு நிகழ்வை நடாத்தினர். தொடர்ந்து வெளிநாட்டு அமைச்சுக்குச் சென்று அங்கு கையெழுத்துப் படிவங்கள் கையளிக்கப்பட்டன.

சுவிஸ் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் தழுவியதாக நடாத்தப்பட்ட இந்தக் கையெழுத்து வேட்டை தங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததாகவும், சுவிஸ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
nanry puthinapalakai 

ad

ad