புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013

கே.பியிடம் விசாரணை நடத்த இலங்கையிடம் உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்த்திருக்கும் சி.பி.ஐ!- இந்துஸ்தான் டைம்ஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடனான தொடர்புகள் பற்றி கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் முறையான விசாரணைகளை நடத்த இந்திய மத்திய விசாரணை பிரிவினர் (சி.பி.ஐ) இலங்கையின் உத்தியோகபூர்வமான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 
குமரன் பத்மநாதன் (கே.பி) விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத வலயமைப்பின் தலைவராக பணியாற்றி வந்தார்.
இது தொடர்பில் தகவல் வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத சி.பி.ஐ அதிகாரி ஒருவர்,
இலங்கையிடம் தாம் விடுத்த கோரிக்கை நிலுவையில் உள்ளது. தமிழ் நாட்டில் கே.பி. எதிராக பதிவு செய்யப்படட வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச பொலிஸ் ஊடான பிடிவிராந்தும் இன்னும் நிலுவையில் இருக்கின்றது. தமிழ் நாடு பொலிஸார் இதனை இந்தியாவிடம் ஒப்படைக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கே.பிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனினும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அவரிடம் முறையான கேள்விகளை கேட்க வேண்டும்.
கே.பி தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய முன்னைய அணுகலானது முறைசாரா அணுகலாக இருந்து என்றார்.
கே.பி. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு முதல் கே.பி. அரசாங்கத்தின் பாதுகாப்புடன் கிளிநொச்சியில் தனது அரசசார்பற்ற நிறுவனத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
2010 ஆம் ஆண்டிலும் 2011 ஆம் ஆண்டின் இறுதியிலும் சி.பி.ஐ. மற்றும் இந்திய புலனாய்வுப் பிரிவினரிடம் கே.பி. ஒப்படைக்கப்படுவார் என இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி ஸ்ரீபெரம்பத்தூரில் இடம்பெற்ற ராஜீவ் காந்தியின் கொலையில் அவரது பங்கு குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருந்த கே.பி. தனது பங்கை மறுத்த அவர், அந்த சதித்திட்டம் பற்றி தான் அறிந்திருக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

ad

ad