பிரத்தானிய பிரதமர் உதயனுக்கு விஜயம்
அதன்படி இன்று பிற்பகல் 3.15 மணிக்கு உதயன் நிறுவனத்திற்கு வருகை தந்த கமரூன் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் ஆகியோருடன் கலந்தரையாடினார்.
இதன்போது பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அண்மையகாலம் வரை பத்திரிகைக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டதுடன் நேரடியாகவும் பார்வையிட்டார்.
மேலும் அண்மையில் விசமிகளால் எரித்து நாசம் செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தையும் பார்வையிட்டதுடன் நிறுவன அனைத்து பணியாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இவருடன் சர்வதேச ஊடகவியவாளர்களும் பணிமனைக்கு வருகைதந்திருந்ததுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இதேவேளை, யாழ்.பொது நூலகத்தில் வடக்கு முதலமைச்சருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டதுடன் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கும் விஜயம் மேற்கொண்டதுடன் வலி.வடக்கு மக்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=626722445415178448#sthash.qEwKvgdi.dpuf
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.