புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014

நாடாளுமன்றத்திற்குள் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்யும் முயற்சியில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெவரப்பெருமவே வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என இவர் கோரி வருவதுடன் அந்த பதவி தொடர்பில் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
அக்கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவராக சட்டத்
தரணி அஜித் பீ. பெரேரா எம்.பி. பணியாற்றி வருகிறார். தனக்கு மாவட்ட தலைவர் பதவி கிடைக்காது போனால் ரணில் விக்ரமசிங்கவின் உடலில் 18 இடங்களில் கத்தியால் குத்த போவதாக தெவரப்பெரும உளறியுள்ளார்.
ரணிலை மட்டுமல்ல, கரு ஜயசூரிய, அஜித் பெரேரா ஆகியோரையும் கத்தியால் குத்த போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏன் ரணிலை கத்தியால் குத்தி கொலை செய்யவில்லை எனக் கேட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூட தன்னை திட்டியதாகவும் தெவரப்பெரும கூறியுள்ளார்.
ராஜபக்ஷ ஆதரவாளர்களான களுத்துறை ரத்தரான், அமைச்சர் வெல்கம கொலை செய்வதற்கான தைரியத்தை தெவரப்பெருமவுக்கு வழங்கியுள்ளதுடன் பெருமளவில் பணத்தை கொடுத்துள்ளனர்.
இரண்டு ஊடகங்களின் உரிமையாளர்களுக்கு அவருக்கு உதவி வருவதாக அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. எதிரிகளின் கைப்பாவையாக மாறியுள்ள தெவரப்பெரும அண்மையில் கருஜயசூரிய தூஷணத்தில் திட்டியுள்ளார்.
பாலித தெவரப்பெரும களுத்துறை பிரதேசத்தில் பிரபலமான ரவுடியாக இருந்துள்ளதுடன் சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பில் சிறையில் இருந்தவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு வரும் போதும் அங்கிருந்து வெளியேறும் போதும் கைது செய்ய முடியாது. நாடாளுமன்றத்திற்குள் வைத்து பொலிஸாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கைவைக்கும் அதிகாரம் இல்லை.
இவ்வாறான நிலைமையை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் நபரை பயன்படுத்தி ரணிலை கொலை செய்ய ராஜபக்ஷ அரசாங்கம் தருணம் பார்த்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் வடக்கு, கிழக்கு மாத்திரமல்லாது தெற்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறக் கூடிய ஒரே பொதுவான வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என கணக்கு போட்டுள்ள ராஜபக்ஷ அரசாங்கம், கொலை செய்யும் சதித்திட்டத்திற்கு உயிரூட்டியுள்ளது.
மதுளுவாவே சோபித அல்லது கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர் பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் அவர்களால் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை கவர முடியாது என கணக்கிட்டுள்ள அரசாங்கம், பாரிய எதிரி ரணில் என மதிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், இதுவரையில் எந்த பிரச்சினையும் இல்லாதிருந்த தெவரப்பெரும தூண்டிவிடப்பட்டு, ரணிலுக்கு எதிராக ராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது என அந்த சிங்கள இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ad

ad