புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


தேர்தல் சட்டத்தை மீறிய கோத்தபாய
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் உதய கம்மன்பிலவின் நேற்றைய ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகவே தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார்.
அதில் கலந்து கொண்டது மாத்திரமில்லாமல், கடந்த முறையை விட இம்முறை கம்மன்பிலவுக்கு மூன்று மடங்கு அதிகமான விருப்பு வாக்குகளை அளிக்குமாறு அவர் மக்களடம் கோரிக்கை விடுத்தார்.
கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியின் சகோதரராக இருந்தாலும் பதவி அடிப்படையில் அவர் ஒரு அரச அதிகாரி. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பது அரச சேவையில் அதியுயர் பதவியாகும்.
இப்படியான அதிகாரிக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரசியல் தொடர்பில் பகிரங்கமாக மூச்சைக் கூட விட முடியாது. இதனால் இது தேர்தல் சட்டத்தை கடுமையாக மீறி செயற்பட்ட நடவடிக்கையாகும்.
கோத்தபாய இந்த சட்டவிரோத செயலை முதல் தடையாக செய்யவில்லை. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த தேர்தலிலும் கம்மன்பிலவின் ஆரம்ப பிரசாரக் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதனடிப்படையில், சட்டத்தரணியான உதய கம்மன்பிலவும் நாட்டின் சட்டத்தை மீறி தேர்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வெற்றி பெற்றாலும் எவராவது நினைத்தால், அவருக்கு எதிராக தேர்தல் சட்டத்தின் கீழ் வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad