புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


குவேனியின் சாபத்தில் இருந்து மீள ஆலயம் கட்டும் சிங்களவர்கள்

இலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த இயக்கர் குலத்தை சேர்ந்த வேடுவ பெண்ணான குவேனி சிங்கள மக்களுக்கு இட்ட சாபத்தில் இருந்து மீள அவருக்கு ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்று நூல்களில் ஒன்றான மகாவம்சத்தில் கூறப்படும் குவேனி என்ற இயக்கர் குல வேடுவ பெண் இறக்கும் போது, இளவரசர் விஜயனுக்கும் சிங்கள இனத்திற்கும் இட்ட சாபத்தினால், சிங்களவர்கள் மத்தியில் இதுவரை ஒற்றுமை ஏற்படவில்லை என சிங்கள மரபு வழிக்கதைகளில் கூறப்படுகிறது.
இந்த சாபத்தை போக்க வேண்டுமாயின் இளவரசர் விஜயன் மற்றும் குவேனி ஆகியோரின் சிலைகள் அருகருகில் இருக்கும் வகையில் ஆலயம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட முயற்சி கடந்த 12 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவேறியது.
மாத்தறை புகையிரத நிலைய வீதியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்ட போது, அந்த ஆலயத்தில் விஜயன் மற்றும் குவேனியின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இலங்கையில் சிங்களவர்கள் உருவாக காரணமானவர் எனக் கூறப்படும் விஜயம் மற்றும் இயக்கர் குல வேடுவ பெண்ணான குவேனி ஆகியோருக்கான உலகின் முதல் கோயில் இதுவாகும்.

ad

ad