புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


கொமாண்டர் துமிந்த தலைமையில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை: ஆணைக்குழுவிடம் சாட்சியம்
கொமாண்டர் துமிந்த தலைமையில் 3000 இராணுவத்தினருக்கு மேல் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு பல தமிழர்களை கைது செய்துகொண்டு சென்றனர். அதில் பலர் இன்றுவரை எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை என சாவகச்சேரியில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வயோதிபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
இதேவேளை கடந்த 1996ம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற பாரிய சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்பு காணாமல் போன தனது கணவனை மீட்டுத் தருமாறு குடும்பப் பெண்ணொருவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டிருந்து 2009ம் ஆண்டு வரையான யுத்தகாலப் பகுதியில் காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த விசாரணைக்கு வருகை தந்தவர்களில் பலர் இராணுவத்தினருக்கு எதிராக தமது சாட்சியங்களையளித்ததோடு,
கடந்த 1996ம் ஆண்டு சாவகச்சேரி, நாவற்குழிப் பகுதியிலிருந்த இராணுவ முகாமிற்கு பொறுப்பாளராக இருந்த கொமாண்டர் துமிந்த தலைமையிலான இராணுவத்தினரால் தமது பிள்ளைகள் மற்றும் கணவன் ஆகியோர் காணாமல் போனதாக சாட்சியமளிக்கப்பட்டது.
இதேவேளை மேற்படி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த வயோதிபர் ஒருவர் கூறுகையில்,
மறவன் புலோவிலுள்ள தனது வீட்டிற்கு வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கடந்த 1996ம் ஆண்டு தனது இரண்டு மகன்களையும் கொண்டு சென்றதாகவும் தனது மகன்களை கைதுசெய்ய வந்த இராணுவத்தினர் தமக்கு உரிய பதிலளிக்கும் மனநிலையில் இருந்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை எங்களிடம் பல கேள்விகளைக் கேட்கும் இந்த ஆணைக்குழு எமது பிள்ளைகளைக் கொண்டுபோய் வைத்துள்ள இராணுவத்திடம் எதை கேட்டது எனவும் கேள்வியெழுப்பினார்.
அத்தோடு கொமாண்டர் துமிந்த தலைமையில் சாவகச்சேரியில் அந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது பலர் தலையாட்டிகளைக் கொண்டு கைது செய்யப்பட்டதாகவும் இராணுவம் கைது செய்தவர்களில் பலர் எங்கு சென்றனரோ தெரியவில்லை எனவும் சாட்சியமளித்தனர்.

ad

ad