புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


உலக வரைபடத்தில் இலங்கை எங்கு இருக்கிறது என்பது தெரியாதவர்களே அமெரிக்க காங்கிரஸில்

ஊடகங்களின் தலைமை அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் செயலாளர்

உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினர் இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார் என ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்தும் தேசிய நடவடிக்கை திட்டத்திற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஊடகங்களின் தலைமை அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்திரு க்கிறார்.
இலங்கை எங்கிருக்கிறது என்று உலக வரைபடத்தில் கண்டுபிடிக்கும் பொது அறிவு அற்றவர்களை அங்கத்தவர்களாக கொண்டிருக்கும் அமெரிக்க காங்கிரஸ், இலங்கைக்கு எதிரான கண்டனப் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கு எத்தனிப்பது வேதனையை அளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் ஒவ்வொன்றாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்த அவர், முதலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமென்று தெரிவித்தார்.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை சரியாக மதிப்பீடு செய்த பின்னர் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணைக் குழுவுக்கு காணாமல் போனோர் பற்றி 13,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி, சுமார் 8,000 பொதுமக்கள் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்படுகிறது.
2012ம் ஆண்டு மே மாதத்தில் அன்றைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கு இலங்கை யின் நல்லிணக்க செயற்பாடு கள் குறித்து நாம் தகவல்களை பெற்றுக்கொடுத்த போது, நாம் அந்த அம்மையாருக்கு நல்லிணக்கப்பாட்டை சில மாதங்களில் செய்து முடிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி, குறுகிய காலத்தில் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நாம் மாயாஜாலக்காரர்கள் அல்ல என்பதை நினைவுபடுத் தினோம் என்று லலித் வீரதுங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து வதற்கு நாம் 18 மாதங்களை செலவு செய்துள்ளோம். இது தொடர்பாக நாம் பெருமளவு பணிகளை செய்து முடித்திருக் கிறோம் என்று தெரிவித்த லலித் வீரதுங்க, தான் 1977ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இருந்த போது என்னுடன் இருந்த சகாக்களில் ஒருவர் அல்லது இருவருக்கு மாத்திரமே தமிழ்மொழி அறிவு இருந்தது என்று கூறினார்.
இதனால், அரசாங்கம் இலங்கை நிர்வாக சேவைக்கு தமிழ்மொழி அறிவுடையவர்களை சேர்த்துக் கொள்வதற்காக சமீபத்தில் விசேட பரீட்சை ஒன்றையும் நடத்தியது. இவ்விதம் நாம் இப்போது தமிழ் அறிவு படைத்தவர்களை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் கூறினார்.
வடமாகாணத்தில் தற்போது நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறதென்று தெரிவித்த
ஜனாதிபதியின் செயலாளர், 2009ம் ஆண்டில் வடமாகாணத்தில் இருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 30 சதவீதமாக குறைக்கப்பட்டிருக் கிறதென்று சொன்னார்.
அதுபோன்று கிழக்கு மாகாணத்தில் ஆயுதப்படையினரின் எண்ணிக்கை 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்படாத நாட்டின் பல பிரதேசங்களில் சுமார் 50 சதவீதமான ஆயுதப்படையினர் நிலை கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்த அவர், நாட்டின் பாதுகாப்பை கவனத்திற்கு எடுத்து அவ்வப்போது ஆயுதப் படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறதென்று கூறினார்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அவற்றின் மீதான விசாரணையின் ஆதாரங்கள் தற்போது மேல் நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூதூரில் ஏ.சி.எப். என்ற சர்வதேச தொண்டர் அமைப்பின் உறுப்பினர்களின் கொலை தொடர்பாக சட்டமா அதிபர் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாக வழக்குகளை தொடர்ந்துள்ளார். எல்.ரி.ரி.ஈ.யின் சிறுவர் போராளிகளும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. ஆயுதப்படை வீரர்கள் 11ஆயிரத்து 872 பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் 171 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட் டுள்ளார்கள்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, யுத்தம் முடிவடைந்த பின்னர் தனியாருக்கு சொந்தமான 20 ஆயிரம் ஏக்கர் காணி அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான 5,700 ஏக்கர் காணியும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பரிந்துரைகளில் 43 பரிந்துரைகள் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாகவும் மும்மொழி தொடர்பானவையாகவும் அமைந்திருக் கின்றன.
இது தொடர்பாக அரசாங்கம் உரிய சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். தான் ஜெனீவாவில் அமெரிக்க காங்கிரஸின் 40 உறுப்பினர்களை சந்தித்து இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கிக்கூறிய போது, யுத்தம் பல்லாண்டுகளாக நடைபெற்ற போதும் யுத்தத்தின் இறுதி இரண்டுவார கால நிகழ்வுகள் குறித்து மாத்திரம் அமெரிக்கா அக்கறை காட்டுவது தவறு என்பதை சுட்டியதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.

ad

ad