புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014



ஜெயலலிதா 3வது அணிக்கு தலைமை தாங்கி பிரதமராக ஆனால்  எங்களுக்கு மகிழ்ச்சிதான்: சீமான்
  
 நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளராக இருந்த சுபா.முத்துக்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நிருபர்களிடம் பேசுகையில், 
’’2016ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்கும். அதற்காக எங்களை தயார் செய்து வருகிறோம்.


இந்தியாவில் 3வது அணி காங்கிரஸ் பாஜகவிற்கு மாற்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு புதுதில்லியில் நடந்த ஆட்சி மாற்றமே சான்று. 2 கட்சிகளுக்கும் மாற்றாக தான் ஆம் ஆத்மியை மக்கள் தேர்நதெடுத்தனர். ஆனால் அவர்களால் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
   இதற்கு காரணம் ஒரு தொண்டு நிறுவனம் செய்ய வேண்டிய செயலை ஆம் ஆத்மி  கட்சி செய்தது தான். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அதிகாரி. சிறு வயதிலிருந்தே அரசியலில் இருந்து விட்டு பதவிக்கு வந்தால் தாக்கு பிடித்தருக்கலாம்.
ஒரு தத்துவத்தை தேடிவிட்டு பதவிக்கு வர வேண்டும். ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ பதவிக்கு வந்துவிட்டு தத்துவத்தை தேடினார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று  அரவிந்த் கெஜ்ரிவால் நினைத்தார். ஆனால் அதற்கு அதிகாரம் தேவைப்பட்டது. அதிகாரத்தை கையில் எடுக்க நினைத்தார். அது ஊழலில் ஊறிபோனவர்களின் போட்டியால் அவர் வெறுத்து தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.
   ஆட்சியால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது.  புரட்சியால் மட்டுமே அது சாத்தயமாகும். புரட்சி தான் புரட்டிபோடும்.   தேசிய கட்சிகளான காங்கிரஸ் பாஜகவால்  நமக்கு பயன் இல்லை. மத்தியில் 3 வது அணி சாத்தியமாகும். ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்துவிட்டு; மாநில கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் எண்ணம். மத்தியில் ஆளுவதற்கு நரேந்திரமோடியா, ராகுல் காந்தியா, ஜெயலலிதாவா என்று கேட்டால் ஜெயலலிதாவை தான் முன்னிருத்த வேண்டும்.

3வது அணிக்கு தலைமை தாங்குவதற்கு பல தலைவர்கள் இருக்கலாம் . ஆனால் ஜெயலலிதா 3வது அணிக்கு தலைமை தாங்கி பிரதமராக ஆனால் அது எங்களுக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு தனது பேட்டியில் கூறினார்.

ad

ad