புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

சோனியா காந்தி தனது கடவிசீட்டு நகலை ஒப்படைக்க வேண்டு அமெரிக்க நீதிமன்றம் 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.
இதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.


சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில் தொடர்புடைய கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜெகதீஷ் டைட்லர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தவிடாமல் பாதுகாப்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பங்கு உள்ளது என கூறி அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் மனித உரிமை மீறல் வழக்கினை,  நீதி தேடும் சீக்கியர்கள் அமைப்பு தாக்கல் செய்துள்ளது.


இந்நிலையில், மனித உரிமை மீறல் குறித்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி சோனியா காந்தி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தான் எந்த சம்மனும் பெறவில்லை என்றும், குறிப்பிட்ட கால கட்டத்தில் தான் அமெரிக்காவில் இல்லை என்றும் சோனியா தனது மனுவில் கூறி உள்ளார்.


இந்த மனுவை விசாரித்த அமெரிக்க கோர்ட், சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 முதல் 9ம் தேதி வரை சோனியா அமெரிக்காவில் இல்லை என்பதை உறுதிபடுத்த , அவரின் பாஸ்போர்ட் நகலை அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது.

ad

ad