புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

டெல்லியில் அறிவிப்பு 30 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மத்திய சென்னை–மெய்யப்பன், காஞ்சீபுரம்–விசுவநாதன், சிவகங்கை–கார்த்தி சிதம்பரம்



தமிழ்நாட்டில் 30 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. மத்திய சென்னையில் சி.டி.மெய்யப்பனும், காஞ்சீபுரத்தில் விசுவநாதனும், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரமும் போட்டியிடுகிறார்கள்.

தனிமரமாக நிற்கும் காங்கிரஸ்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று எல்லா முயற்சிகளையும் செய்தது. ஆனால் தி.மு.க. தலைமை காங்கிரசுடன் கூட்டணி வைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து விட்டது.
இதையடுத்து தமிழகத்தில் தனிமரமாக நின்றாலும் 39 தொகுதிகளிலும் வேட்பாளரை தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் 66 பெயர்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து டெல்லி சென்றார்.
அங்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்துடன், ஞானதேசிகன் கலந்து ஆலோசித்தார். பின்னர் அந்த பட்டியலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவிடம் தாக்கல் செய்தார்.
30 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்
மத்திய குழு அதை பரிசீலனை செய்து வேட்பாளர் பட்டியலை முடிவு செய்தது. பின்னர், தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி நேற்று இரவு அறிவித்தார்.
அதன்படி, 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:–
1. மத்திய சென்னை– சி.டி.மெய்யப்பன்
2. ஸ்ரீபெரும்புதூர்– அருள் அன்பரசு (முன்னாள் எம்.எல்.ஏ.)
3. காஞ்சீபுரம்– பி.விசுவநாதன் எம்.பி.
4. அரக்கோணம் –நாசே ராஜேஷ்
5. வேலூர் –ஜே.விஜய் இளஞ்செழியன்
6. திருவண்ணாமலை –ஏ.சுப்பிரமணியம்
ஈ.வி.கே..எஸ்.இளங்கோவன்
7. ஆரணி – டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் (முன்னாள் எம்.எல்.ஏ.)
8. கள்ளக்குறிச்சி– ஆர்.தேவதாஸ்
9. சேலம்– மோகன் குமாரமங்கலம்
10. நாமக்கல் – ஜி.ஆர்.சுப்பிரமணியம்
11. ஈரோடு –பி.கோபி
12. திருப்பூர் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (முன்னாள் மத்திய மந்திரி)
13. நீலகிரி –பி.காந்தி
14. கோவை – ஆர்.பிரபு (முன்னாள் எம்.பி.)
15. திண்டுக்கல் –என்.எஸ்.வி.சித்தன் (தற்போதைய எம்.பி.)
கார்த்தி சிதம்பரம்
16. திருச்சி – சாருபாலா தொண்டைமான் (முன்னாள் மேயர்)
17. பெரம்பலூர் – எம்.ராஜசேகரன் (முன்னாள் எம்.எல்.ஏ.)
18. கடலூர் – கே.எஸ்.அழகிரி எம்.பி.
19. சிதம்பரம் – பி.வள்ளல் பெருமான்
20. மயிலாடுதுறை – மணிசங்கர் அய்யர் எம்.பி.
21. நாகப்பட்டினம் – டி.ஏ.பி.செந்தில்பாண்டியன்
22. தஞ்சாவூர் – டி.கிருஷ்ணசாமி வாண்டையார்
23. சிவகங்கை – கார்த்தி ப.சிதம்பரம்
திருநாவுக்கரசர்
24. மதுரை – டி.என்.பரத் நாச்சியப்பன்
25. தேனி – ஜே.எம்.ஆரூண் ரஷீத்
26. விருதுநகர் – மாணிக் தாகூர் எம்.பி.
27. ராமநாதபுரம் – திருநாவுக்கரசர் (முன்னாள் மத்திய மந்திரி)
28. தூத்துக்குடி – ஏ.பி.சி.வி. சண்முகம்
29. தென்காசி – டாக்டர் கே.ஜெயக்குமார் (முன்னாள் எம்.எல்.ஏ.)
30. திருநெல்வேலி – எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி.
 பிற மாநிலங்கள்
மேலும் குஜராத்தில் 4 தொகுதிகளுக்கும், பீகார், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 3 தொகுதிகளுக்கும், டெல்லி, மத்தியபிரதேசத்தில் தலா 2, தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் திக்விஜய்சிங்கின் சகோதரர் லட்சுமன்சிங் போட்டியிடுகிறார்.

ad

ad