புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

கிழக்கு மாகாண சபையில் 3 உறுப்பினர்கள் பதவியிழப்பு

விசேட அறிவிப்பின் கீழ் மீண்டும் சபையில் சேர்ப்பு
கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் தமது மாகாண சபை உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்று கிழக்கு மாகாண சபையின் தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி அறிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல் (ஸ்ரீல.மு.கா), தயா கமகே (ஐ.தே.க), ஜே.பி. பிரியந்த பிரேமகுமார (ஸ்ரீல.சு.க) ஆகிய மூன்று பேருமே தமது மாகாண உறுப்புரிமையை இழந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று
உறுப்பினர்களும் தொடராக 90 நாட்களுக்குள் மாகாண சபை அமர்வுகளில் பங்குபற்றாததால் தம் உறுப்புரிமையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் சபைத் தவிசாளர் திருமதி கலப்பதி தலைமையில் மாகாண சபை அமர்வு நேற்று முன்தினம் கூடியது. அச்சமயம் சபைத் தவிசாளரின் சார்பில் இம்மூவரது விவகாரம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அமைச்சரும் மாகாண அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை சபையில் விசேட அறிக்கையொன்றை முன்வைத்தார்.
அந்த அறிக்கை வருமாறு, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான தயாகமகே, ஏ.எம். ஜெமில், மு. பிரியந்த பிரேமகுமார ஆகியோர் கடைசியாக சபைக் கூட்டத்திற்கு வருகை தந்து தங்களின் வரவைப் பதிவு செய்த தினங்களில் இருந்து 90 நாட்கள் கடந்த நிலையில் அதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சபையின் எந்தவொரு கூட்டத்திற்கும் சமுகம் அழிக்காமல், இருப்பதாகவும், அவர்கள் மூவரும் தங்களது வராமைக்காக சபையின் முன் அனுமதி எதனையும் பெற்றிருக்கவில்லை எனவும் கிழக்கு மாகாண சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.1987 ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபை சட்டத்தின் பிரிவு (2) உடன் கிழக்கு மாகாண சபையின் செயன்முறை விதிக்கோவை பந்தி (65) இனை சேர்த்து வாசிக்கப்படுவதன் பிரகாரம் இம் மூன்று கிழக்கு மகாண சபை உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் வறிதாக்கப்படுவதான ஒரு பிரகடனத்தை கிழக்கு மாகாண சபையின் தவிசாளரின் பிரதிநிதியாக இச்சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
இருப்பினும் நிதிக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ்வாறான பிரகடனம் ஒன்றை ஏன் நிறைவேற்றக் கூடாது என்ற நிலைமை உருவாகி உள்ளதாலும், இம் மூன்று உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருக்கு 2014.03.08 ம் திகதிய கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள விளக்கங்களில் வலிதான காரணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே கிழக்கு மாகாண சபை இது தொடர்பான ஒரு பிரகடனத்தை குறித்த சட்ட ஏற்பாடுகளின் (29) பிரிவின் பிரகாரம் நிறைவேற்ற இச்சபைக்கு முன் மொழிகின்றேன்.
இம் மூன்று உறுப்பினர்களின் வறிதாக்க ப்பட்ட உறுப்புரிமை தொடர்பாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இம் மூன்று உறுப்பினர்களும் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களாக செயல்படுவ தற்கு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இம் மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்ச்சி யாக 90 நாட்கள் கிழக்கு மாகாண சபை கூட்டங்களில் சமுகமளிக்காது தொடர்பான விளக்கம் கேட்டு கிழக்கு மாகாண சபையினால் அனுப்பட்ட கடிதங்களுக்கு நியாயமான காரணங்கள் தெரிவித்து விளக்க கடிதங்கள் அனுப்பி யுள்ளனர்

ad

ad