புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

எங்கே போனது மலேசிய விமானம்.இன்றைய  நவீன  விஞ்ஞான உலகுக்கே சவாலா ?ஒரு முழு நீள அலசல் 
.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசிய  விமானம், நடுவானில் மாயமானது. மாயமான விமானம் பற்றி எந்த தகவலும்
இல்லை.
தொழில் நுட்பம் வளர்ந்த நிலையிலும் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்ற அளவில் ஊகச் செய்திகள் உலா வருகிறதே தவிர உருப்படியான துப்பு எதுவும் இதுவரை கிட்டவில்லை.
ஆஸ்திரேலியா – 6
ஆஸ்திரியா – 1
கனடா – 2
சீன மக்கள் குடியரசு – 153
பிரான்ஸ் – 4
ஹாங்காங் – 1
இந்தியா – 5
இந்தோனேசியா – 7
இத்தாலி – 1
மலேசியா – 38 +12 பணிக் குழுவினர்
நெதர்லாந்து – 1
நியூசிலாந்து – 2
ரஷ்யா – 1
உக்ரைன் – 2
ஐக்கிய அமெரிக்கா – 3
மொத்தம் (15 நாட்டினர்) 239
- இந்த 239 பேரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், தெற்கு சீன கடல் பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. அங்கு கிடைக்காததால், மலாக்கா கடல், இந்திய பெருங்கடல், அந்தமான் கடல் பகுதியில் தேடப்பட்டது. எங்குமே விமானம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தத் தேடுதல் பணியில் மலேசியா,  ஆஸ்திரேலியா,  புருனே,  சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், நியுசிலாந்து, பிலிப்பைன்ஸ்,  சிங்கப்பூர், தைவான்,  தாய்லாந்து,  ஐக்கிய அமெரிக்கா, வியட்நாம்,  வங்காளதேசம் முதலிய நாடுகள் கடற்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கின. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்தித்தார் நஜீப்.
தொழில்நுட்ப கோளாறு, விமானத்தின் ஸ்டக்ஷரல் டேமேஜ் ஆகியவற்றின் சாத்தியங்களை ஒதுக்கி விட்டார்.
எமது புலனாய்வு தற்போது, விமானத்தை செலுத்திய விமானிகள், விமானத்தில் இருந்த பயணிகளை மையம் கொண்டே உள்ளது. அவர்களது பின்னணிகள் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளோம்.  வேண்டுமென்றே யாரோ ஒருவராலோ, சிலராலோ விமானம்  திசைதிருப்பி கொண்டு செல்லப்பட்டது என்று புலனாய்வில் இருந்து தெரியவருகிறது என்ற பிரதமர்,  விமானத்தை அதன் வழக்கமான பாதையில் இருந்து திருப்பி, மேற்கு நோக்கி கொண்டு சென்றவர்கள், அதன் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர் என்றார்.
இந்தத் தகவலை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சொல்லும் போது கீழ்க்காணும் மேலதிக விவரங்கள் அவருக்கு தெரியுமா, அல்லது முற்றிலும் தெரியாதா என்பது கேள்விக்குறிதான்.
மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு பீய்ஜிங் நோக்கி தன் வழக்கமான   பாதையில், மலேசியாவின் தரைப் பகுதியை கடந்து கடல் பகுதிக்கு மேலாக பறந்து, வியட்நாமை நோக்கி சென்றது முதல் நிலை.
அப்போதுதான் விமானத்தில் இருந்து “ஆல் ரைட் குட் நைட்” என்று சொல்லி விட்டு விமானம் பறந்திருக்கிறது.
அப்போது ட்ராபிக் கன்ட்ரோல் டவர், மலேசிய டவர்தான். விமானம், மலேசிய டவரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள்தான் பறந்து கொண்டிருந்தது. சர்வதேச விமான பயணங்களின்போது விமானிகள், விமானம் ஒரு நாட்டு வான் எல்லையை கடக்கும்போது, அந்த நாட்டு டவருடன் இறுதி தொடர்பை மேற்கொள்ளுவார்கள்.
அதன்பின், இந்த டவர் தொடர்பை துண்டித்து  விட்டு, எல்லைக்கு மறுபுறம் உள்ள மற்ற நாட்டின் டவரை ரேடியோவில் அழைத்து தொடர்பை ஏற்படுத்துவார்கள் என்பதே நடைமுறை.
அந்த விமானம் தமது இறுதித் தொடர்பை மலேசிய டவருடன் மேற்கொண்டு துண்டித்த சிறிது நேரத்தில், வியட்நாம் டவரின் அலைவரிசை ஆட்டோமேட்டிக்காக காக்பிட் ரேடியோவில் டியூன் செய்யப்பட்டிருக்கும். ஆனால், மாயமான மலேசியன் விமானத்தின் விமானிகள், அந்த அலைவரிசையில் பேசவே இல்லை.
காரணம்  விமானம் வியட்நாம் வான் எல்லைக்குள் நுழையும்  முன்னர், கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோதே, மேற்கு நோக்கி திரும்பியது. அதாவது  வடகிழக்கு நோக்கிய பாதையில் இருந்து, வடமேற்கு நோக்கிய பாதைக்கு  விமானத்தின் ஃபிளைட் பாத் காக்பிட்டில் இருந்தவர்களால் மாற்றப்பட்டது.
அதாவது விமானம் தான் செல்லவேண்டிய பாதையில் இருந்து திசைதிருப்பப்பட்டது, அல்லது இப்போது எழுந்து நிற்கும் விஷ்வரூப கேள்வியான கடத்தப்பட்டது.
malay_pilot
விமான கட்டுப்பட்டு அறையுடனான தொடர்பை துண்டித்து விட்டு விமானம் பறந்ததால் சந்தேகம் விமானிகள் மேல் வந்தது. ஒரு வேலை விமானிகளே விமானத்தை கடத்தி இருப்பார்களோ என்பதுதான் அது. விமானியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனைக்கு பிறகு பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன. விமானி, கேப்டன் ஜகாரி அஹ்மத் ஷா, மலேசியாவின் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர் என தெரிகிறது.
அன்வர் இப்ராஹிமுக்கு மலேசிய நீதிமன்றம், 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இப்ராஹிமுக்கு தண்டனை வழங்கப்பட்ட தினம், மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற அதே தினம்தான்.
மாயமாகியுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் ஜகாரி அகமது ஷா, தனது நெருங்கிய உறவினர்தான் என்று முன்னாள் பிரதமரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்வர் கூறுகையில், எனது ஒரு மருமகனின் சொந்தக்காரர்தான் ஜகாரி. இதை நான் மறுக்கவில்லை, மறைக்கவும் இல்லை. நான் அவரை பலமுறை சந்திக்கவும் செய்துள்ளேன் என்றார் அன்வர்.
கடலுக்கு மேலாக பறந்த விமானம், இந்த திருப்பல்களின் பின் மீண்டும் மலேசியாவை நோக்கியே பறந்தது.
தன் பயண பாதையை தவிர்த்து விட்டு மலேசியாவின் பினாங் பகுதியில் உள்ள தீவுகளை நெருங்கிய விமானம் மீண்டும் மலேசியாவை கடந்து, கடலுக்கு மேலாக பறந்தது.
இது நடந்து கொண்டிருக்கும் போது மலேசிய ராணுவம் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இதை கவனித்திருந்தால் விமானத்தை வழிமறித்து தரை இறக்கி இருக்கலாம்.
இப்போது விமானம் மீண்டும் ஒரு முறை திசை திரும்பியது. இம்முறை மீண்டும் மேற்காக திரும்பியது. மேற்கே திரும்பிய விமானம், கடலுக்கு மேலாக பறந்துகொண்டு இருக்கையில் விமானத்தின் அல்டிடியூட் மிக அபாயகரமான அளவில், 5,000 அடிக்கு குறைக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில், இந்தியக் கடலின் அந்தமான் பகுதியை நோக்கி பறந்து சென்றது. அதன்பின் என்ன ஆனது என்று இதுவரை தெரியவரவில்லை.
இந்நிலையில் சந்தேக வளையம் சக விமானியின் மீதும் படிந்தது. காரணம் தரை கட்டுப்பட்டு தொடர்புடன் ஆல் ரைட் குட் நைட் என்று பேசியது இவர்தான் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டு விட்டது.
சரி விமானத்திய கடத்தியவர்கள் இவர்கள் தானா? அல்லது பயணம் செய்த பயணிகளை யாராவது தீவிரவாதிகள் இருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அப்போதுதான் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் விமான பொறியாளர் ஒருவர் என்பது தெரிய வந்தது. அவர் பெயர் முகமது கைருல் அம்ரி சலாமாத்(29).
malaypilotஅவரும் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானம் பற்றி நன்றாக தெரிந்த ஒருவர் தான் அதை வேறு பாதையில் செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பு சிஸ்டம்களை சுவிட்ச் ஆப் செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தின் என்ஜினியர் சலாமத் மீது சந்தேப் பார்வை விழுந்துள்ளது.
இது குறித்து சலாமத்தின் தந்தை உமர் கூறுகையில், ஒரு குழந்தைக்கு தந்தையான சலாமத் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விமான என்ஜினியராக உள்ளார். அவருக்கும், விமானம் மாயமானதற்கும் தொடர்பு இருக்காது. என் மகன் சிறப்பாக பணியாற்றி வந்தார். அவர் நல்ல மகனாக இருந்தார். மாதத்தில் ஒரு முறையாவது எங்களை வந்து பார்ப்பார் என்றார்.
இப்போது விமாம் மாயமானது தொடர்பாக வெளிவரும் அனனைத்து தகவல்களும் வேறு வேறு ஊடகங்கள் தரும் தகவல்களே தவிர மலேசிய அரசின் தகவல்கள் அல்ல.
மலேசியாவின் நம்பகத்தன்மையின் மீதும், அதன் விசாரணைப் போக்கையும் கவனிக்கும் நாடுகள் கடுமையான விமர்சனத்தை வைக்கின்றன.
முதலில் ஆசிய நாட்டவரைப் போல் தோற்றம் அளித்த இருவர் ஐரோப்பியர் பாஸ்போர்டில் திருட்டு தனமாக பயணம் செய்த போது கவனிக்கத் தவறியது முதல், தங்கள் நாட்டின் மீது பறந்த விமானத்தை கோட்டை விட்டது வரை மலேசியாவின் இயலாமை பற்றி உலகம் பேச ஆரம்பித்து விட்டது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம், புறப்பட்ட விமானம் தங்கள் நாட்டிற்கு வரவில்லை என்று சீனா சொன்ன பிறகுதான் மலேசியாவிற்கே விஷயம் தெரியும்.
கடுமையான உள்நாட்டு அழுத்தத்தால் தவிக்கும் சீனா, மலேசியாவின் மீது தன் கோபப் பார்வையை திருப்பி இருக்கிறது. சீன நாளிதழ்களும் மிக கடுமையான விமர்சனத்தை முன் வைக்கின்றன. இந்தத் தேடுதல் வேட்டைக்கு தலைமை தாங்கும் தகுதி மலேசியாவிற்கு இல்லை என்று.
இந்நிலையில் உறுதிப் படுத்தப் படாத சில தகவல்கள் உலா வருகின்றன. விமானம் மங்கோலியாவில் அல்லது சோமாலியாவில் தரை இறங்கியிருக்கலாம் என்ற சந்தேகம்.
அப்படி வருவதற்கான காரணம், அந்த நாடுகளில் ஒரு விமானத்தை தரையிறக்க முன் அனுமதி பெறத் தேவையில்லாயாம். கார் பார்க்கிங் செய்வது போல் செய்து விட்டு போகலாமாம்.
மலேசியாவில் இருந்து ஏழு மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது மங்கோலியா.
சோமாலியாவில் முறையான அரசும் இல்லை. உள்நாட்டுப் போர் களை கட்டியுள்ள பிரதேசம் அது. அங்குள்ள போராளிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் பணம் கொடுத்தால் போதும். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
விமானம் மேற்கு நோக்கி பறந்துள்ளது. எனவே அனேகமாக அது மங்கோலியா அல்லது வடக்கில் சோமாலியாவில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த நாடுகளில் ரேடார் மூலம் துப்பு துலக்குவது கடினமாம். சில நாட்கள் அந்தமானை நோக்கி வட்டமிட்ட சந்தேக வளையம் இப்போது மங்கோலியா, சோமாலியா என வட்டமிடுகிறது.
உண்மையிலேயே இந்த விமானம் கடத்தப் பட்டதாக அல்லது, விமானிகளால் திசை திருப்பப் பட்டதாக இருந்தால், உலக நாடுகளின் தொழில்நுட்பத்துக்கு சவால் விடும் வகையில் அவர்களின் செயல் அமைந்திருக்கும் என்பதுதான் உண்மை.

ad

ad