புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெல்லும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
சென்னையில் கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அறிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 8; தே.மு.தி.க., 14; ம.தி.மு.க., 7; பா.ம.க., 8;
ஐ.ஜே.கே., 1; கேஎம்டி கட்சி 1 ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்,
தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி அமைப்பதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூட்டணி முடிவாகி, தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டோம். அதிகாரபூர்வமாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்.
இந்தக் கூட்டணி தமிழகத்தில் வெற்றிகரமாக அமைந்துள்ளது. வலுவான கூட்டணியாக இது அமையும். தமிழகத்தில் இந்தக் கூட்டணி 25 தொகுதிகளில் வெல்லும். கூட்டணியில் அனைவரது முக்கிய நோக்கமும் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவது தான் என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேசிய ஜனநாயக கூட்டணி உச்சகட்ட முக்கியத்துவம் அளிக்கும். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது எங்களது மிக முக்கிய குறிக்கோளாக இருக்கும். இரண்டாவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வலுவில்லாத தலைமை மற்றும் உண்மையாக முயற்சி எடுக்காதது காரணமாக இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும்படி இலங்கை அரசை வலியுறுத்த இந்தியாவால் முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கையை வலியுறுத்த தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக பணியாற்றும் என்றார்,

மேலும் பேசிய அவர், அத்வானி போட்டியிட வசதியாக, காந்திநகர் மற்றும் போபால் ஆகிய தொகுதிகளை பார்லிமென்ட் போர்டு ஒதுக்கி உள்ளது. அத்வானி எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறாரோ அதில் போட்டியிடலாம். இந்த பிரச்னையில் கட்சியில் எந்த குழப்படியும் இல்லை என்றார்.

ad

ad