புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

தமிழகத்தில் மோடி போட்டியிட்டால் எந்த தொகுதியையும் விட்டுக்கொடுப்போம்: விஜயகாந்த்

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்
பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், .தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்ப்போம் என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார் என்றும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், எந்த தொகுதியை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்போம்' என்றும் கூறினார்.
மேலும் கூறியதாவது:  கன்னியாகுமரியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள்.. அந்த மீனவர்களின் நலனுக்காக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் கூறியபடி இதுவரை ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படவில்லை.
அதேபோல், இங்கு ரப்பர் தோட்ட தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, இதுவரை மாறி மாறி ஆட்சி செய்துவரும அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எந்த நன்மையும் செய்யவில்லை. இங்கே பட்டா உள்ள நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுவதற்குகூட தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது என்றார்.

ad

ad