புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

இராணுவம் கிழக்கை மீட்ட பின்னர்தான் எங்கள் பிள்ளைகள் காணாமல் போயினர்; மட்டு. மக்கள் கண்ணீர் கதை
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் நாளை வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களுக்கான பதிவுகள் கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது. 


அதன்படி இரண்டு பிரிவுகளில் இருந்தும் 75பேருக்கு சாட்சியப்பதிவுக்கு வருகைதருமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கிழக்கு மாகாணத்தில் முதலாவது சாட்சிய பதிவு அமர்வினை இன்று செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

1990 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை காணாமல் போனவர்கள்  தொடர்பிலேயே உறவுகள் சாட்சியம் வழங்கினர். அதன்படி அழைக்கப்பட்ட 54 பேரில் 41 பேர் மட்டுமே இன்று சமூகளித்திருந்தனர். எனினும் புதிய பதிவுகளாக   சுமார் 400 பேர் தங்களுடைய பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் இவர்களுக்கு மீண்டும் ஒரு நாள் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய சாட்சியப்பதிவுகளில் 2007ஆம் ஆண்டு கிழக்கு தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து இராணுவம் கைப்பற்றிய பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மேலும் கடத்தல் காணாமல் போதல் மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர்  விஷேட அதிரடிப்படையினர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு இதுவரை தகவல் கிடைக்காதவர்கள் பற்றியே அதிக முறைப்பாடுகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றுக்கு யுத்த காலம் மற்றும் யுத்தம் நிறைவடந்த நிலையில் கருணா மற்றும் பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டதாக சட்சியமளித்தனர்.மேலும் இலுப்படிசேனை, உன்னிச்சை ஆகிய இடங்களில் இருந்த இராணுவ  அதிகாரியின் கீழ் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே காணாமல் போனவர்களுக்கு இவர்களே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பதிவுகளில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமகே, திமிங்கு பட்டதுருக்கே பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ இராமநாதன் ஆகியோர் முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நாளை மறுதினம் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி சாட்சியம் அளிப்பதற்கான 55 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.





ad

ad