சனி, மார்ச் 15, 2014


தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டேன்! மு.க.அழகிரியை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பேட்டி!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சனிக்கிழமை மதியம் சென்னையில் இருந்து மதுரை திரும்பினார். மு.க.அழகிரியை, தேனி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.எம்.ஆரூண் சந்தித்தார். மு.க.அழகிரி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

இச்சதிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.எம்.ஆரூண், 
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் என்னை தேனி தொகுதியில் வெற்றி பெற வைத்ததற்கு நன்றி தெரிவித்தேன். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்தற்கு வாழ்த்து தெரிவித்தேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன். தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டேன் என்றார்.
திமுக வேட்பாளருக்கு எதிராக உங்களை தேனியில் மு.க.அழகிரி போட்டியிட வைத்துள்ளாரா என்ற கேள்விக்கு, அதை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.